Language Selection

பி.இரயாகரன் - சமர்

சரிநிகர் 109 இல் ( நவம்பர் 07 நவ 20 ) புதியஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த சிவசேகரம் மூன்றாம் உலகில் சோவியத் தலையீட்டையொட்டி கூறுவதைப்பார்ப்போம்.

"சோவியத்ஒன்றியம் ஒரு சமுக ஏகாதிபத்தியம் என்ற  கருத்து எனக்கு உடன்பாடான ஒன்றல்ல. அது மூன்றாம் உலக நாடுகளின் ஒரே இரட்சகன் என்ற விதமான கருத்து. அதே அளவுக்கு நிராகரிக்கத்தக்கது." என சிவசேகரம் கூறுகிறார்

அப்படியாயின் தமிழ் தேசியவிடுத லைப்போராட்டத்தில் இந்தியத் தலையீட்டை  ஒரு பிராந்திய ஆதிக்க சக்தி என்பதிலும் உடன்பாடில்லை. இந்தியா தேசியவிடுதலைப்போரின் ஆதரவாளர் என்பதிலும்   உடன்பாடில்லை என்ற கூற்றுக்கு ஒப்பானது.

அப்படியாயின் அது என்ன? இந்தியா ஒரு பிராந்திய ஆதிக்க சக்தி என்பதை  எப்படி மறைக்க சிலர் முனைகின்றனரோ அதேபோல் சோவியத் ஒரு சமூக ஏகாதிகத்தியம் என்பதை மறைப்பது சிலருக்கு  அவசியமாகவுள்ளது.

சீனாவில் மாவோவை மறுத்ததைத் தொடர்ந்து  இவர்களும் ( சிவசேகரம் மற்றவர்களும் ) மறுக்கின்றனர். அதன் காரணத்தால்  மாவோவும் சில கொம்யுனிஸ்ட்டுக்களும்  கலாசட்சாரப் புரட்சி எதற்காக தொடங்கினரோ அதை மறுத்துப் புதிய ஜனநாயககட்சியும்  சிவசேகரமும் அடிப்படை வர்க்க முரண்பாட்டை  மறுதலிக்கின்றனர். அதனால் தான் சோவியத் சமூகஏகாதிபத்தியமாக இருந்ததை மறுத்து இரண்டுக்கும் இடைப்பட்ட  ஒரு வடிவம் தேடுகின்றனர்.

அதாவது தமது அரசியல் பிழைப்புவாதத்துடன்  வர்க்கப் போராட்டத்தை கைவிட்ட ஒரு வடிவம் தேவை. அதற்கு ஒரு கோட்பாடு தேவை,  அது இரண்டுமல்லாத ஒன்றாகக் காட்டுவதான் தமது இருப்பை  தக்கவைக்க உதவும் என்ற கனவு.

சரிநிகர் 124 இல் திட்டமிட்ட மார்க்சிய விரோத கோட்பாட்டை வெளிப்படுத்தும்  மூன்று செய்திக் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. தலித்தியக் குறிபுக்கள், பின் நவீனத்துவமும் பின் காலனித்துவமும் சிலபுதிய புத்தகங்கள்  என்ற வௌவேறு தலைப்புகளில் வெளியாகிய செய்திக்ள மட்டுமின்றி  அண்மைக்காலமாக சரிநிகரில்  அதிகளவு மார்க்சிய விரோதக்கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் ஒன்றைப்பின்னோக்கிப் பார்க்கின்றபோது  சரிநிகரில் நடந்த வேலை நிறுத்தத்தின் பின்  புதிய ஆசிரியர் குழு ஒன்றை ஏற்படுத்திய நோக்கம் வர்க்கவிடுதலைக்கு எதிராக செயல் தளத்தை இலய்கையில, அதுவும் தமிழில் செய்ய முனைந்ததையே இது காட்டுகிறது.

சரிநிகர் 114 இல் (ஜனவரி 23 பெப் 05 1997)இதழில் ''சரிநிகர் போற்றுவது இல்லை''எனத் தலைப்பிட்டு அ.மார்க்ஸ்,   சத்யா என இருவர் பெயர் போட்டு ஒரு  செய்தி வெளியாகியிருந்தது. இதை எடுத்த எடுப்பில் பார்த்தால் யார் எமுதியது என்ற குழப்பமே வாசகர்களுக்கு எஞ்சும்.

இலங்கையில் உலக வங்கியின் ஆதிக்கம்  உள்ளுர் தேசிய  செல்வங் களை முடக்குவது அல்லது தனியார் ஆக்குவது என்ற அடிப்படைக் கொள் ளையாகும்.

16.1.1996 தொழிலாளர்பாதையின்  புரட்சி கம்ய+னிஸக் கட்சி  ( இவர்கள் தமது பெயரை அண்மையில் சோசலிச சமத்துவக் கட்சி ) என மாற்றி மேலும் சீரழிக்கின்றனர். பாசிசபார்பானிய இந்து மத வெறியை நியாயப்படுத்திய மணிரத்தி னத்துக்காக   குரல் கொடுத்துள்ளனர்.

புல்காரில் 2ஆம் உலக யுத்த முடிவில் அங்கு போராடிய கமினிஸ்ட்டுக்களும் அந்நாட்டை மீட்ட செம்படையும்  இணைந்து சோசலிச அரசை நிறுவன. இந்த ஆரம்ப முயற்சியை 1950ன் இறுதியில்   ஆட்சிக்கு வந்த குருசேவ் தடுத்து நிறுத்தியதுடன்  முதலாளித்துவ மீட்சியை தொடங்கியதுடன்  மக்களில் இருந்து அந்நியப்பட சர்வாதிகாரத்தை கொம்மியுனிசத்தின் பெயரால் நிறுவிக் கொண்டனர்.

பிரஞ்சு தேர்தல் ஜனாதிபதியின் விருப்பை மீறியவகையில் முடிந்துள்ளது. ஜனாதிபதிக்கு சார்பான பாரளுமன்றத் தில் இருந்து அறுதிப் பெரும்பான்மை இன்னமும் ஒருவருட ஆளும் தகுதியை கொண்டு இருந்த நிலையில்  காலம் செல்லச் செல்ல வெற்றி நிச்சயம்  அற்ற  தன்மை என்பது தேர்தலை வேகப்படுத்தியது.

சரிநிகர் 112,113 இல் ராதிகா குமாரசாமி பெண்புலிகளும் பெண்விடு தலைப் பிரச்சனைகளும் என்றதலைப்பி லான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.  இந்தகருத்துக்களை மறுதலித்துக் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

சரிநிகர் 123 இல் " கோணேஸ்வரிகள் '' என்று தலைப்பிட்டு கலா ஒருகவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களை சரிநிகர் எதிர் கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர்ஆணாதிக்கம்  இனவாதத்து டன் இணையும் போது ஒரு தமிழ் பெண் சந்திக்கும்  இனவாத ஆதிக்கத் தை மிக அருமையாக துல்லியமாக படம் பிடித்து  கலா காட்டிருந்தார். இதன் மூலம்  சமுகத்தின் இயலாமைக் கு  சவால்விட்டுள்ளனர். அதை நேரம்  இனவாதம் சிங்களப் பெண் மீதான இராணுவ வன்முறையை ஒத்தி வைத் துள்ளதை அழகாக சுட்டிக் காட்டுவதன் மூலம்  இலங்கை அரசியலை சரியாக  மிக நேர்த்தியாக சுட்டிக் காட்டுகின்றது இக்கவிதை.

கிழக்கும் மேற்கும் என்ற அனைத்துலகத் தமிழ்படைப்புகளின் தொகுப்பு என்ற பெயரில் ஒன்றை லன்டன் தமழர் நலன் புரிசங்கம் வெளியிட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE