Language Selection

பி.இரயாகரன் - சமர்

பழைய சரக்குகள் மக்கள் முன், பெறுமானம் இழந்து அம்பலமாகிப் போகப் போக புதியச் சரக்குகளைத் தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல அ.மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் முன்னுரை"64 என்ற கட்டுரையை "இருள்வெளி" என்ற இருண்ட, மக்கள் விரோத, மார்க்சிய விரோத பாரீஸ் மலரில் எழுதியுள்ளார்.
இக்கட்டுரையில் சாந்தால் மொஃபேயின் மேற்கோள்களை, தலைப்புக்குக் கீழ் தடித்த எழுத்தில் போட்டே தனது ஆணாதிக்கக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.

book _7.jpgஉ லகில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் யுனிசேவ் கி.பி. 1995-இல் ஓர் அறிக்கையை முன்வைத்தது. அந்த அறிக்கையில் ஆரம்பக் கல்விக்கு 1,300 கோடி டொலரும், சுத்தமான தண்ணீருக்கு 600 கோடி டொலரும், சுகாதாரத்துக்கு 900 கோடி டொலரும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கு 600 கோடி டொலருமாக மொத்தம் வருடம் 3,400 கோடி டொலர் இருப்பின், உலகில் குழந்தைகளின் நிலைமைகளை மேம்படுத்த முடியும். ஆனால் இது உலகமயமாதலின் சுரண்டலில் சாத்தியமில்லை.

இ யற்கை மற்றும் மனித வரலாற்றைத் தனிச் சொத்துரிமை அமைப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி, திருத்திக் காட்டுவதன் மூலம், ஆணாதிக்க வரலாற்றை இயற்கை வரலாறாகக் காட்டும் முயற்சியில், மனித உணர்வுகளைக் கொச்சையாகப் பயன்படுத்துவது அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த வகையில் உளவியல் மீது தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்ப்பதைப் பார்ப்போம்.

ச ரிநிகர்: 112 - 113 இல், இராதிகா குமாரசாமி என்பவர் "பெண்புலிகளும் பெண்விடுதலைப் பிரச்சினைகளும்" என்ற தலைப்பிலான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. இந்தக் கருத்துக்களை மறுதலித்துக் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

செ ல்வி திருச்சந்திரன் எழுதிய "தமிழ் வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலைநோக்கு" என்ற நூல் பல்வேறு கடந்த காலத் தரவுகளை உள்ளடக்கி உள்ளது. பெண் சார்ந்து வந்த நூல்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க தரவு ஆய்வு நூலாகும். இந்த ஆய்வு மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டு செய்யவில்லை. மாறாக அதை முடிந்த முடிவுகளாக எடுக்கக் கூடாது என்பதன் ஊடாகவே நூல் உட்புகுகின்றது.

ச ரிநிகர் 123-இல், "கோணேஸ்வரிகள்" என்று தலைப்பிட்டு கலா என்பவர் ஒரு கவிதை எழுதியிருந்தார். இக்கவிதையைத் தொட்டு பல விமர்சனங்களைச் சரிநிகர் எதிர் கொண்டு சிலவற்றை வெளியிட்டு இருந்தனர்.

பெ ண்களின் சுவடுகளில்..." என்ற சாந்தி சச்சிதானந்தம் எழுதிய நூல் பல மானிடவியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளை உள்ளடக்கி உள்ளது. தமிழில் வந்துள்ள பெண்ணியம் சார்ந்த நூல்களில் மிகவும் முக்கியமான பெண்ணின் வரலாறு பற்றிய நூலாகும்.

"சமுதாய மாற்றம் என்பது பெண்விடுதலையில்லாமல் சாத்தியமில்லை"  என்று லெனின் பிரகடனம் செய்தார். மார்க்சியத்தின் உள்ளார்ந்த உயிர்மூச்சைக் கழுத்தைப் பிடித்தே நெரித்துக் கொல்ல முனையும் மார்க்சிய விரோதிகள் பல திரிபுகளையும், வரலாற்று இயங்கியல் புரட்டுகளையும் கையாளுகின்றனர்.


"அன்புள்ள டாக்டர் மார்க்சுக்கு.." என்ற தலைப்பில் மார்க்சின் அன்றைய காலக்கட்டத்தை ஒட்டிய வடிவில் இன்று ஷீலா ரௌபாத்தம் என்பவர் எழுதிய கடிதம், அன்றைய வரலாற்று நிலைமையை மறுத்தபடி, இன்றைய வரலாற்று நிலைமையுடன் எழும் மார்க்சிய எதிர்ப்பில் வெளியாகியுள்ளது.

எங்கும் எதிலும் ஒரு பிழைப்புத்தனம். அரசியல் என்பதே நக்குத்தனமாகிவிட்டது. (தமிழ்) மக்களின் பிரச்சனைகளை இனம் காணுதல் அருவருப்புக்குரிய ஒன்றாகிவிட்டது. மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளின் அடிப்படையில் இயங்குதல், அதற்காக குரல் கொடுத்தல், என அனைத்தையும் மறுத்து இயங்குவதே அரசியலாகிவிட்டது. இப்படி குரூரமாகி நிற்பவர்கள், மனித அவலங்கள் மீது நீந்தி நீச்சலடிக்கின்றனர்.

1. பரிசியன் பிரான்சின் செய்திப் பத்திரிக்கை
2. Femmes, le mauvais gener?

3. le FIGARO பிரான்சில் வெளிவரும் வலதுசாரி பத்திரிக்கை
4. சிறைபற்றிய ஆவணப்படம் (Documentary) பிரான்ஸ் தொலைக்காட்சி: M6 ஒலிபரப்பிய தேதி: 10.10.1999
5. உயிரோடு உலாவ இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச் சூழலும் வந்தனா சிவா
6. புதிய ஜனநாயகம் இந்திய புரட்சிகர மார்க்சிய ஆதரவு அரசியல் பத்திரிக்கை
7. பிராமணமதம் ஜோசப் இடமருகு
8. குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் ஏங்கெல்ஸ்

உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் 1.2 கோடி ஆண்கள், இளம் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக அணுகுகின்றனர்.31 யுனிசேவ் விடுத்த அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் 10 இலட்சம் ஆண் - பெண் குழந்தைகள் (16.5.2000)42 பாலியல் சந்தையில் பாலியல் தேவைக்காக மூலதனமாக்கப் படுகின்றனர். 1970 முதல் 1990 வரையிலான காலத்தில் விபச்சாரச் சந்தையில் மூன்று கோடி பெண்கள் முதலீடாக்கப்பட்டுள்ளனர். 10 இலட்சம் பெண்கள் ஒவ்வொரு வருடமும் பாலியல் முதலீட்டில், புதிதாக மூலதனமாக்கப்படுகின்றனர். இது பல்வேறு துறை சார்ந்தும், குறிப்பாக உல்லாசப் பயணத்துறை சார்ந்து விரிவாகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE