Language Selection

பி.இரயாகரன் - சமர்

ஆணாதிக்க அமைப்பில் பெண்ணுக்கு எதிரானதாகக் காணப்படும் அனைத்தையும், எதிர்மறையில் புரிந்து மறுக்கும் ஒரு விமர்சனத்தை "ஆணாதிக்கமும் பெண்ணியமும்" (தொகுதி:1) என்ற என் நூல் மீது சேது என்பவர் முன்வைத்துள்ளார்.


இயற்கையின் வளர்ச்சி விதியையும் அதன் தேர்வையும் அதன் இயங்கியல் தன்மையையும் கூட மறுத்து விடுகின்றார். ஆணாதிக்கத்தை வெறுமனே ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்து, அதை வறட்டுத்தனமான ஆணாதிக்கத்தை முன்தள்ளுகின்றார்.

பிரான்சில் வீட்டில் உணவு தயாரிப்போர் யார்? என்பதை அட்டவணை:7 மூலமாகப் பார்ப்போம்.15


அட்டவணை: 7


நாட்கள்                                பெண்            ஆண்            மற்றவர்கள்
வேலை நாட்கள்                76                   14                        10
விடுமுறை நாட்கள்         65                   24                        11

பி ரேசிலில் பெற்றோர்களுடைய உழைப்பின் கூலி மீது பிள்ளைகள் அதிக அளவு ஆதிக்கத்தைச் செலுத்தி, ஏகாதிபத்தியச் சீரழிவின் சுதந்திர நுகர்வோராக உள்ளனர். 5,000 கோடி அமெரிக்க டொலரை, பெற்றோரிடம் இருந்து பெற்று, தமது நோக்கத்தை ஈடேற்றுவதாக ~வேஸா| பத்திரிகை தெரிவித்துள்ளது. 40 சதவீதமான குழந்தைகள் தமது பெற்றோரை உயர்வாக மதிப்பதை விட, உதைபந்தாட்ட (கால்பந்து) வீரர்களை உயர்வாக மதிக்கின்றனர். இவர்கள் வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதைப் பார்ப்பது? எங்கு சுற்றுப் பயணங்கள் செல்வது? வீட்டுக்கு வராது வேறு வீடுகளில் தங்குவது என்று பெற்றோரின் அனுமதியின்றி வெம்பிச் சிதைகின்றனர். சமூகச் சுதந்திரத்தை மறுத்த தனிமனிதச் சுதந்திரச் சீரழிவின் பக்கத்தில் இதுவும் ஒன்று.

தமிழில் மொழிப் பெயர்ப்பாக ரொஸலின்ட் மைல்ஸ்சின் "உலக வரலாற்றில் பெண்கள்" என்ற முக்கியத்துவம் வாய்ந்த நூல் ஒன்று வெளிவந்துள்ளது. மனித வரலாற்றில் ஆதி மரபுகளை, பண்பாட்டுக் கலாச்சார எச்சங்களை, பழைய இலக்கிய மரபுகளில் இருந்தும், காலனித்துவக் குறிப்புகளில் இருந்தும் பல்வேறு விடயங்களையும் உலகளவில் தொகுத்து, அதை எடுத்துக் காட்டியுள்ளது. பெண் சார்ந்த, பெண்ணின் அதிகாரம் சார்ந்த பல்துறை வரலாற்று ஆதாரங்களை இந்த நூல் தனக்குள் திரட்டியுள்ளது. இந்த அடிப்படையில் மட்டும் சமூகத்தை மாற்றி அமைக்கப் போராடும் அனைவரும், இந்த நூலை நிச்சயமாகப் படித்து தெளிய வேண்டியது அவசியமாகும்.

பெ ண்ணியவாதியாக டயானா காட்டப்பட்ட நிலையில், பெண்ணியல் வாதிகளின் மௌனம் அதை அங்கீகரிப்பது ஏன்? நடைமுறை ரீதியாக, கோட்பாட்டு ரீதியாக, வேறுபாடற்ற ஏகாதிபத்தியப் பெண்ணியத்தையே பெண்ணியமாகக் கருதும் வரை, மௌனம் அதன் அரசியல் பண்பாகின்றது. யார் இந்த டயானா? ஒரு கவர்ச்சிக்கன்னி, ஒரு மொடலிஸ்ட், ஒரு பணக்காரச் சீமாட்டி, ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தைக் கோரிய பெண்.

பிரான்ஸையும், பாரிசையும், புலம் பெயர் சமூகத்தையும் அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் உள்ளாக்கிய 11 வயது சிறுமி நிதர்ஷினி மீதான கற்பழிப்புக்கு, படுகொலைக்குப் பின்னால் கப்பம் மற்றும் கொள்ளையின் பின், தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கில் தமிழ் (கணிசமான பிரஞ்சு மக்களும்) மக்கள் திரண்டு தமது அனுதாபத்தை, அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர்.

தா ய்ப் பால் குடிக்கும் குழந்தையை விட, புட்டிப்பால் குடிக்கும் ஏழைக் குழந்தையின் இறப்பு 15 மடங்கு அதிகமாகும். ஐக்கிய நாட்டுச் சபை சார்ந்து யுனிசேவ் விடுத்த அறிக்கையொன்றின்படி தாய்ப்பால் மறுக்கப்பட்டுப் புட்டிப்பால் குடிப்பதன் காரணமாக, அது சார்ந்த நோயால் நாள் ஒன்றுக்கு 4,000 குழந்தைகள் இறந்து போகின்றன என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

"தெ ன்னாசியச் சமூகத்தில் பெண்நிலைவாதம்"68 என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை, தென்னாசியப் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து எடுத்து, எக்ஸிலில் (முன்னைய எக்ஸிலில்) முன்வைத்துள்ளனர். இதை ஆராய்வோம்.

அ. மார்க்சின் கட்டுரையைத் தொட்டு வரக் கூடிய கூற்று ஒன்றை "எக்சில:2"-இல் அரவிந் அப்பாத்துரை எழுதியிருந்தார். அதைப் பார்ப்போம்.


"ஜாதி வேற்றுமை" பெண்ணை ஒடுக்கும் விதிமுறைகள் ஆகியவற்றைப் போதிக்கும் மனுதர்மம் என்ற நூலை எதிர்த்துப் போராடுவதில் மட்டுமே தலித்தியமும் பெண்ணியமும் ஒன்று சேர்கின்றது. மற்ற எல்லா பரிணாமங்களிலும் பெண்ணியமும் தலித்தியமும் வௌவேறு போராட்டங்கள்"67 என்று ஏழுதுகின்றார் ஆனால் எப்படி என விளக்கவில்லை.

குழந்தைகள் ஒரு பெற்றோருடன் வாழ்வதைப் பார்ப்போம்.11


அட்டவணை: 3


நாடுகள் சதவீதம்
இங்கிலாந்து 23%
பின்லாந்து 17%
பிரான்ஸ் 15%
ஜெர்மனி 13%
போர்ச்சுக்கல் 12%
கொலான்ட் 11%
இத்தாலி 11%
ஸ்பெயின் 8%
கிரீஸ் 7%

05 -08-2000 அன்று ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் நடந்த சந்திப்பில், பெண்கள் தொடர்பான விவாதம் ஒரு பெரும் விவாதமாக மாறியது. இங்கு வைக்கப்பட்ட பெண்ணியம் தொடர்பான கருத்துக்களை ஒட்டிய விவாதத்தை வளர்த்து எடுக்கும் வகையில், அன்று முன் வைத்த கருத்துக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE