Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _1.jpgவெக்ரோன் தனது சொந்த அவலத்தின் உண்மைத்தன்மையைக் கூட தனது ஊடகமான தொலைக்காட்சியின் ஊடாகக் கொண்டு வந்துவிட முடியவில்லை. இந்த நிலையில், எப்படித்தான் தமிழ்ச் சமூக நலன் சார்ந்த உண்மைகளைக் கொண்டு வர முடியும்?


திடீரென சில காரணங்களைக் கூறி நிறுத்திய வெக்ரோன் தொலைக்காட்சி, மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்கள் தமது சொந்தக் காதுகளிலேயே பூக்களைச் செருகியபடி அரோகராச்சாமி ஐயப்பன் பாட்டு பாடுகின்றனர். எந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது நடத்தும் திரைமறைவுச் சதிகள் மற்றும் நாடகங்கள், தமிழ் இனத்தின் அடிமைத்தனத்தின் மேல் செங்கம்பளம் விரித்து அதன் மீதாகவே நடைபோடுகின்றது.

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர்கள் தமிழ் கல்வி நிறுவனங்களையும், சிறு சஞ்சிகைகளையும், ஒலி, ஒளி நாடாக்களையும் வெளியிட்டு தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த முயற்சியில் சிலர் இதை வியாபாரமாகவும்,

மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசீச வழிமுறைகளில் தான்,

தேசியத்தில் உள்ளடகத்துக்கும் வடிவத்துக்கும் உள்ள வேறுபாட்டை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளாமல், ஒரு நாளும் பாட்டாளி வர்க்கம் தேசியத்தை ஆணையில் வைக்க முடியாது.

வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், சர்வதேசியம் என்பதை எற்றுக் கொண்ட தோழர்களே, உலகமயமாதலுக்கு பதிலாக சர்வதேசியத்தை முன்னிறுத்திய மக்களின் அதிகாரத்தை கோரும் தோழர்களே, சமூதாயத்தின் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து

book _4.jpgசில முக்கியமான விடையங்கள் பற்றிய அடிப்படையான குறிப்புகள் அவசிமாகிவிடுகின்றது. கருணாகுழு பிரிந்து சென்றதை வெறும் தனிப்பட்ட பிரச்சனையாக பிரபாகுழு கூறி, பிரச்சனையின் அடிப்படைச் சாரத்தையே மறுக்கின்றனர். மறுபுறத்தில் ஆதாரமற்ற வதந்திகளையே சமூக கருத்தாக்குகின்றனர். எந்தவிதமான அடிப்படையுமற்ற வகையில் பரப்பும் வக்கிரங்கள், தனிப்பட்ட நபர்களின் கற்பனைத் திறனுடன் இசைந்து செல்லுகின்றது. தமிழ் மீடியாக்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள், கட்டுரைகள் என்று பலவற்றை வண்ணவண்ணமாக வெளியிடுகின்றனர். புலியின் பாசிசக் கோட்பாட்டுக்கு இசைவான பினாமியத்தை அடிப்படையாகக் கொண்ட வானொலிகள், கற்பனைகளை விதைத்து, விவாதம் என்ற பெயரில் வக்கரிக்கின்றது. உண்மையில் பாசிசக் கட்டமைப்பில், தமிழ் மீடியாவும் வக்கரித்து நிற்கின்றது அவ்வளவே.

book _4.jpgசமாதானம் அமைதி என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில், புலிகள் ஏகாதிபத்திய கைகூலியாகி சோரம் போயுள்ளனர். இந்தநிலையில் ஏகாதிபத்தியம் போடும்; எலும்புகளை சுவைக்கும் யாழ் மையவாதத்துக்கு எதிரான நாய்ச் சண்டையில், பங்காளிகள் தமது பங்கைக் கோருகின்றனர். இது யாழ்-கிழக்கு என்று புலித் தலைமைகளுக்கு இடையிலான பிளவாகி, அதுவே ஒருபுறம் தூற்றலாகி மோதலை நோக்கி நகருகின்றது.


 தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு தேசிய விடுதலை இயக்கமல்ல என்பதை, வரலாறு மீண்டும் ஒருமுறை நிதர்சனமாக்கியுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் பார்ப்பனிய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உயர்சாதி இயக்கமே. யாழ்ப்பிரதேச மையவாதத்தை அடிப்படைச் சித்தாந்தமாகக் கொண்ட, ஒரு பிதேசவாத இயக்கமே. ஆணாதிக்கத்தை சித்தாந்தமாகக் கொண்ட ஒரு ஆண்கள் இயக்கமே. இவற்றை எல்லாம் அடிப்படையான சித்தாந்தமாகக் கொண்ட, ஒரு குறுந்தேசிய இனவாதஇயக்கமே. இதன் தலைமை தனிமனித அதிகாரத்தை முன்னிலைப்படுத்தும், ஒரு பாசிசஇயக்கமே. 

உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு, மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. கல்வி மறுப்பதும், கல்வியைத் தனியார் மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம், தேசியப் பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில், தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது. தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரிய ருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது, அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது, கல்வியை விலை பேசி விற்பது, இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.

book _3.jpgஇலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது, சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே, மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.

ஏர் காலாண்டிதழ் (மார்ச 2003), எனது நூலின் உள்ளடகத்துக்கு வெளியில் நின்று, விமர்சனம் என்ற பெயரில் தூற்றிவிடுகின்றனர். அடிப்படையான எனது விவாத உள்ளடகத்துக்குள் நின்று விமர்சிக்க வக்கற்றுப் போகின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE