Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _4.jpg இனங்களுக்கு இடையிலான மோதல் சமூக அவலத்தில் இருந்து திட்டமிடப்பட்டது. அதைப் பூசி மொழுக குறுந்தேசிய உணர்வு இனம் கடந்து உருவாக்கியதன் மூலம் இனயுத்தம் வித்திடப்பட்டது. அன்று இந்தச் சமூக அவலத்தின் அடிப்படை என்ன? 1971-இல் வேலை செய்யக் கூடியவர்களில் வேலை இன்மை 19 சதவீதமாக இருந்தது. இது 1974-இல் 24 சதவீதமாக உயர்ந்தது. இதில் இருந்து மீள யுத்தம், யுத்தப் பொருளாதார, பாசிசச் சட்டங்கள் ஒன்று இணைந்து அவை ஜனநாயமாகி இந்த அமைப்பின் நீடிப்புக்கு கைகொடுத்தது. இந்த யுத்தப் பொருளாதாரம் ஊடாக ஏகாதிபத்திய ஊடுருவல் என்றும் இல்லாத அளவுக்கு இலங்கையில் கால் உன்றியதுடன் அது மேலும் ஆழமாகவே வேகம் பெறுகின்றது. தேசிய அடிப்படைகள், தேசிய பொருளாதாரங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி கற்பழிக்கப்படுகின்றது.

book _4.jpgசமூகம் மீதான நம்பிக்கை இழப்பு சோரவையும் அராஜகத்தையும் உருவாக்கின்றது. சுயநலத்தைச் சாரந்து விரக்தியும் தன்னகங்காரம் சாரந்த தனிமனிதப் போக்குகள் விளைவுகள் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பீதிக்குள் சிதைக்கின்றது. சுய ஆளுமையுள்ள சமுதாயக் கண்ணோட்டம் சாரந்த அறிவியல் சிதைந்து சமுதாயத்துக்கே நஞ்சிடுகின்றது. சமூக அறிவியல் தளம் சுயபுராணங்களை வீம்பு பண்ணும் அளவுக்கு தனிமனித வக்கிரம் வெம்பி வெளிப்படுகின்றது.

book _4.jpgஉலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. கல்வி மறுப்பதும் கல்வியைத் தனியார மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம் தேசியப் பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில் தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது.  மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது.

book _4.jpg1997-ஆம் ஆண்டுக்கும் 2002-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1096 பாடசாலைகளை உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க மூடிய அரசு 2000-க்கும் 2003-க்கும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக 9882 மதுபான விற்பனையகங்களைத் திறந்துள்ளது.

book _4.jpgவெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் சமூகப் பண்பாட்டுச் சிதைவை அரசு திட்டமிட்டு செய்கின்றது. அரசுசாரா நிறுவனம் ஒன்றின் அறிக்கை இலங்கையில் 10000 பாலியல் வன்முறைகள் குடும்பத்தில் நடப்பதாக அறிவித்துள்ளது. இதில் அரைவாசி தந்தைமாரால் நடத்தப்படுகின்றது. இதில் 100 மட்டுமே சட்டத்தின் முன் வருகின்றது. இதில் 54.5 தந்தைமாருக்கு எதிரான புகாராகும். இந்த நிலையில் கரு அழிப்பு இலங்கையில் வருடம் 9 லட்சமாகியுள்ளது. இதில் 15 சதவீதம் திருமணமாகாத கரு அழிப்பாக உள்ளது. பல லட்சம் குடும்பங்கள் பிரிந்த தனிமையில் வரைமுறையின்றி சிதைகின்றது. கணவன் மனைவி பிரிந்து வெவ்வேறு நாடுகளில் வாழ்வது நிரந்தரமான சமூக போக்காகியுள்ளது.

book _4.jpgநாட்டின் தேசியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சிதைக்கவும் பாலியல் ரீதியாக எம்நாட்டு பெண்களை குழந்தைகளை ருசிக்கவும் வரும் வெளிநாட்டவனின் நலன்களை உறுதி செய்வதுடன் சொகுசுப் பண்பாட்டை ஏகாதிபத்தியம் கோருகின்றது. 2003 முதல் 8 மாதத்தில் மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்திருந்தனர. இது 2002யுடன் ஒப்பிடும் போது 23 சதவீதம் அதிகமாகும். சுற்றுலாப் பயணிகளின் வருகை 2002 இல் முதல் ஆறு மாதத்தில் 1.73 லட்சமாக இருந்தது. இது 2003 இல் முதல் ஆறு மாதத்தில் 2.16 லட்சமாக அதிகரித்துள்ளது. எதை நோக்கி எந்தப் பண்பாட்டை நோக்கி எம் நாடு செல்லுகின்றது? வெள்ளைத் தோல் பன்றிகளின் வக்கிரத்தில் பொறுக்கி வாழ்வதைக் கோருகின்றது. இது அதிகரித்துச் செல்வதையே

book _4.jpgஏகாதிபத்திய நலன் என்பது நாட்டை எப்படி ஒட்டுமொத்தமாக விற்பதன் மூலம் மறு காலனியாதிக்கத்தை விரைவாக ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் பின்பாக இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் மூன்று மடங்காகியது. 2003 இன் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு மூலதனம் 1700 கோடி ரூபாவாக இருந்தது. இது 2003-இன் இறுதியில் வெளிநாட்டு முதலீடுகள் 3000 கோடி ரூபாவாக இருக்கும் என்று முதலாளிகளின் முதலீட்டுச் சபை அறிவித்து இருந்தது. ஆனால் அது 5000 கோடி ரூபாவைத் தாண்டியது. அனுமதித்த திட்டங்களில் 60 சதவீதமானவைகளில்

book _4.jpgஇலங்கையை ஆளும் ஆட்சிகள் பெருந் தேசிய சிங்கள இனவாதத்தால் நிறுவனப்படுத்தப் பட்டுள்ளது. இந்த இனவாத அமைப்பில் எந்தக் கட்சி பாராளுமன்ற ஜனநாயக சூதாட்டத்தில் தெரிவானாலும் அதன் அடிப்படை கட்டமைப்பு இதற்குள் தான் நிறுவப்பட்டுள்ளது என்பதை தொடரச்சியாக கடந்த இரண்டு வருட அமைதி மீண்டும் மீண்டும் நிறுவுகின்றது. இந்த இனவாத அமைப்பு தமிழ் மக்களின் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள மக்களின் தேசியத்தைக் கூட அழித்தொழிப்பதில் இனவாதக் கட்டமைப்பை சிறப்பாக நிலைநிறுத்துகின்றது. இந்த இனவாத அமைப்பு உலகமயமாதலை நீடித்து பாதுகாக்கும் வகையில் இலங்கையில் ஏகாதிபத்திய

book _4.jpgக டந்த இரண்டு வருடத்துக்கு மேலாக யுத்தமற்ற ஒரு அமைதி புகைந்து கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத நடத்தைகள் ஜனநாயகப் புரவமான சமூக ஒழுக்கமாகி புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இந்தச் சூழல் பலதரப்பட்ட பிரிவுகளுக்குச் சாதகமானதும் பாதகமானதுமான பல மக்கள் விரோத அம்சங்களை உருவாக்கியுள்ளது. மறுதளத்தில் நாடு அடகு வைக்கப்படுவதும் ஏலம் விடப்படுவதும் என்றும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றது. மக்கள் தமது சொந்தத் தேசிய வாழ்வியல் இருப்புகள் அனைத்தையும் வேகமாக இழந்து வருகின்றனர. உலகமயமாதல் நடைமுறைகள் இலங்கையில் கரைபுரண்டோடுகின்றது. இதுவே அமைதி மற்றும் சமாதானத்தின் தலைவிதியாகியுள்ளது.

book _4.jpg``ச மாதானமா? யுத்தமா? என்பதை மையமான பொருளாக்கிய ஏகாதிபத்தியங்கள் விரிவாகவே களமிறங்கியுள்ளது. புலிகளுக்கும் அரசுக்கும் பின்பக்கமாக கைகளை இறுகக் கட்டபட்ட நிலையில் சமாதானம் பற்றி மூலதனம் உத்தரவுகளை இடுகின்றது. இங்கு அமைதிப் படைக்கு பதில் மூலதனமே சமாதானத்தை கடைப்பிடிக்க உத்தரவுகளை இடுகின்றது. என்றுமில்லாத வகையில் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏகாதிபத்தியத் தலையீடுகள் பெருக்கெடுத்துள்ளது. உண்மையில் யுத்தமற்ற அமைதியை மக்கள் பெற்றாரகளோ இல்லையோ மூலதனம் இதைச் சரியாகவும் சாதகமாகவும் பயன்படுத்தியுள்ளது.

book _4.jpgஇலங்கையில் புரிந்துணரவு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவாரத்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE