Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _4.jpgபுலிகளின் வரலாற்றில் அவர்களை முதன் முதலாகத் தமிழ் மக்கள் மிக நெருக்கமாகவே, சொந்த அனுபவவாயிலாகப் புரிந்து கொண்டுள்ளனர். மக்களை நேரடியாகப் பாதிக்கின்ற உடனடி நிகழ்ச்சி, பரந்துபட்ட மக்களை விழிப்படைய வைத்து விடுவதுண்டு. இது புரட்சிக்குரிய தயாரிப்பு காலங்களில் புரட்சியின் உந்து விசையாகின்றது. தமிழ் மக்களின் விழிப்புணர்வு  நிகழ்ச்சியானது உடனடி நிகழ்வால் அல்ல, ஒரு குறுகிய கால நடவடிக்கையால் நடந்துள்ளது. அமைதி சமாதானம் என்பவை புலிகளுக்கு எதிரான மனஉணர்வை, தமிழ் மக்களின் உணர்வு மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 வருடப் போராட்டத்தில் அவர்களின் போலித்தனமான வேடங்கள் மக்கள் முன் அம்பலமானது, இந்த அமைதிக்குப் பின்னான காலகட்டத்தில் தான்.

book _4.jpgதமிழ்க் குழுக்களின் துரோகம், பிழைப்பு அனைத்தும் புலிகளின் ஜனநாயக விரோத அரசியலில் இருந்து துளிர்க்கின்றது. இதன் மூலம் பலமான சர்வதேச அடித்தளத்துடன், இவை புனர்ஜென்மம் எடுக்கின்றது. தம்மைத் தாம் நியாயப்படுத்த, புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அரசியலாக்கி முன்வைப்பது அதிகரிக்கின்றது. புலிகளுக்கும், துரோகக் குழுக்களுக்கும் இடையில் கொள்கை ரீதியான வேறுபாடுகளை அரசியல் ரீதியாக நுட்பமாக புரிந்து கொண்டால் மட்டும் இனம் காணமுடியம் என்ற நிலை உருவாகி வருகின்றன. சாதாரண மக்களுக்கு இரண்டுமே ஒன்றாகியுள்ளது.

book _4.jpgஅமைதி, சமாதானம் என்பது தொடரும் பட்சத்தில், இலங்கை இனவாத சக்திகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிறது. இனவாதம் மூலம் அரசியல் பேசி பிழைத்த குழுக்களின், தலைவிதி தூக்கில் தொங்க வேண்டியதாகிறது. இது அரசு, எதிர்க் கட்சி என்ற இரு எதிர் தளங்களில் யார் இருந்தாலும், இதுவே அதன் சொந்தத் தலைவிதியாக இருக்கிறது. அமைதி, சமாதானம் என்பது உலகமயமாதல் திசையில் உறுதியாகி வருவதால், இனவாத சக்திகளின் கடைசி மூச்சுத் திணறல் புதிய அரசியல் நெருக்கடியாகியுள்ளது.

book _4.jpgஅரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்த முதல் ஒன்றரை வருட காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் படைகளை விட்டு ஓடியுள்ளனர். யுத்தத்தைச் செய்ய விரும்பாத ஒரு இராணுவம், எந்த தார்மிகப்பலமும் அற்ற நிலையில் ஆக்கிரமிப்பை விசித்திரமாகவே தக்கவைக்கின்றது. உண்மையில் இராணுவத்தை, புலிகள் திறந்தவெளிச் சிறையில் சிறை வகைப்பட்ட நிலையில் தான், இராணுவம் எதிர்ப்பு ஆற்றலைப் பெற்று, எதிர்த்து நிற்கின்றது. இலங்கை இராணுவத்தைச் சுற்றி இராணுவம் தப்பியோடாத வகையில் புலிகள் இருப்பதால், இராணுவம் கலைந்து செல்வதை தடுக்கின்றது. கலைந்து செல்லும் போதும் சரி, தப்பியோடும் போதும் சரி, புலிகள் அவர்களுக்கு மரணதண்டனை வழங்குவதால் இலங்கை இராணுவம் தற்காப்புக் கருதி எதிர்த்துப் போராடுகின்றதே ஒழிய, சிங்கள இனவாத உணர்வு பெற்றுப் போராடவில்லை. யுத்த நிறுத்தத்தின் பின்பு தப்பியோடக் கூடிய வழிகள் அனைத்திலும், இராணுவம் அன்றாடம் தப்பி ஓடுகின்றது. அமைதி, சமாதானம் பற்றிய பேச்சு வார்த்தை தொடங்கி பின்பு, நாள் ஒன்றுக்கு அண்ணளவாக 20 இராணுவத்தினர் படையை விட்டே ஒடுகின்றனர்.

book _4.jpgஉலகமயமாதல் என்ற கட்டமைப்பில் உள்ள பன்னாட்டு தேசங் கடந்த பொருளாதாரமே தமிழீழத் தேசியப் பொருளாதாரம் என்பதைப் புலிகள் நிறுவிவருகின்றனர். அண்மையில்  புலிகளின் விழாக்கள் அனைத்தும், தேசங்கடந்த பன்னாட்டுப் பொருட்களின் விளம்பரங்களால் அலங்கரிக்கப்பட்டே நடத்தப்படுகின்றது. வன்னியில் அவர்கள் நடத்தும் பேச்சு வார்த்தை மேசைகள் கூட, பன்னாட்டுச் சந்தை பொருட்களின் விளம்பரப் பொருளால் அலங்கரிக்கப்படுகின்றது.

book _4.jpgபொருளாதார ரீதியாக இலங்கை மக்கள் சந்திக்கும் நெருக்கடி ஒருபுறம் என்றால், இனவாத நடைமுறைகள் தமிழ் மக்களுக்கு மீள முடியாத பேரிடியாக உள்ளது. இதைவிட புலிகளின் வரி அறவிடும் முறையும், அவர்களின் தேசிய பொருளாதாரக் கொள்கையும் மறுபக்கம் பேரிடியாகி அவலமாகவே பெருக்கெடுக்கின்றது.


 1983 முதல் 2001 வரையிலான காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் அழிந்த சொத்துக்களின் மொத்தப் பெறுமதி சுமார் 40,300 கோடி ரூபா எனறு இலங்கை மத்திய வங்கியே 2003-இல் அறிவித்துள்ளது. அதாவது வருடாந்தர இலங்கையின் தேசிய வருமானத்தை விட இது அதிகமாகும். இது அழிந்த சொத்து இழப்பை மட்டும் குறிக்கின்றது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். 1983-1987-க்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டன. 34 ஆயிரம் வீடுகள் சேதமாகின. 1987-1994-க்கு இடையில் புனருத்தாரணம், புனர்நிர்மானம், நிவாரணமாக 2,265 கோடி ரூபா செலவு செய்யப்பட்டது. போர்ச் செலவீனம் மற்றும் பல்துறை சார்ந்து 1987 முதல் 1998 வரையிலான காலத்தில் (செலவு, சொத்தழிவு, உற்பத்தி இழப்பு) மிக விரிவானது.

book _4.jpgஒருபுறம் இலங்கை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலைமை கனிந்து செல்லுகின்றது. இந்த நிலைமையை உருவாக்கும் மூலதனம் உயர்ந்தபட்ச சலுகைகளை அன்றாடம் பெறுகின்றது. சர்வதேச மூலதனம் தேச மூலதனத்தை விழுங்கி ஏப்பமிடும் வகையில் இச்; சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றது. உலகமயமாதலின் செல்லக் குழந்தையாக இலங்கையைச் சீராட்டி வளர்க்கும் ஏகாதிபத்தியங்கள், இதனடிப்படையில் உள்நாட்டில் ஏற்படும் எந்த நெருக்கடியிலும் உதவத் தயாராகவே உள்ளது.

book _4.jpgஅமெரிக்கா மட்டுமல்ல மற்றைய ஏகாதிபத்தியங்களும், இந்தியாவும் கூட பல எச்சரிக்கைகளை விடுகின்றது. 15.11.02 இலங்கை வந்திருந்த பிரித்தானியப் பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினர் நெஸ்பீ புலிகள் பயங்கரவாதப் போக்கைக் கைவிடவேண்டும் என்றார். புலிகள் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றார். அவர் மேலும் கூறுகையில், புலிகள் தனியான இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் பிரிவு போன்றவற்றை வைத்திருக்க முடியாது என்றார். இவை இலங்கை அரசுடன் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமானது என்றார். தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்வதை வலியுறுத்தி அவர், உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசுடன் கைகோர்த்துக் கொள்ளவும் அழைப்புவிடுத்தார். ரூசியா இலங்கையுடன் இராணுவ ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அமெரிக்காவுடன் சர்வதேச நிலைப்பாடுகளில் ஒன்று சேர்ந்து நிற்கும் பிரிட்டன் 30.12.2002 இல் தனது இராணுவக் கப்பலான கெபபாக்-ஐ இலங்கை துறைமுகத்துக்கு அனுப்பி மறைமுகமாகப் புலிகளை மிரட்டியது.

book _4.jpgஇனப்பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடுகள் அத்துமீறி அதிகரித்துச் செல்லுகின்றது. நேரடியான ஆக்கிரமிப்புக்கான புறச்சூழலைத் திட்டமிட்டே அமெரிக்கா உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் ஒஸாமா பின்லேடன் தலைமையிலான அல்-ஹைடா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத மதவாதக் குழுவுக்கு, கடலில் தற்கொலைத் தாக்குதலை எப்படி நடத்துவது எனப் புலிகள் பயிற்சி அளித்ததாக அமெரிக்கவின் ~~கடல் புலனாய்வுப் பிரிவு|| குற்றம்சாட்டியது. ~~கடல் புலனாய்வுப் பிரிவைச்|| சேர்ந்த கிவ்வென் கிம்மில்மன் புலிகளிடம் இருந்து ~~ஜமா இஸ்லாமியா|| பெரும் பலன்களை பெறுவதாக கூறியதன் மூலம், புலிகள் மேல் கத்தியைத் தொங்கவிட்டுள்ளது அமெரிக்கா. ஒட்டு மொத்தத்தில் இலங்கை இனமுரண்பாட்டின்

book _4.jpgபிரமிப்பூட்டும் வகையில் உதவிகள், கடன்கள் ஏகாதிபத்தியத்தால் வாரி வழங்கப் படுகின்றது. இதற்கு அக்கம்பக்கமாகவே அன்னிய முதலீடுகள் பெருமளவில் போடப்படுகின்றது. நேரடிச் சுரண்டல் மற்றும் கடனுக்கான வட்டி என்ற இரு தளங்களில், இலங்கையின் தேசிய வளங்கள் அனைத்தும் ஈவிரக்கமின்றி சூறையாடப்படுகின்றது. கடன் கொடுக்கும் நாடுகளின் கூட்டமைப்பு 450 கோடி டொலரை (45000 கோடி ரூபாவை) அடுத்த மூன்று ஆண்டுக்கு வழங்கியுள்ளது. இது ஒருபுறம் நடக்க இதற்கு வெளியில் நாடுகள், வங்கிகள் தனித்தனியாக கடன் உதவி என்ற பெயரில் பெரும் தொகை நிதிகளை அன்றாடம் வழங்குகின்றன. இந்த நிதி ஆதாரங்கள் பலவற்றை நேரடியாக தனது சொந்த மேற்பார்வையில் செலவு செய்கின்றன.

book _4.jpg ஏற்றுமதிப் பொருளாதாரம், அன்னிய மூலதனக் கொழுப்பை அடிப்படையாக கொண்டது. இலங்கையின் தேசிய உற்பத்திகள், வெள்ளையர்களும், பணக்காரர்களும்; நுகர வேகமாக நாடு கடந்து செல்லுகின்றது. வெள்ளையர்கள் சுற்றுச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் கழிப்பவைதான், இறக்குமதியாக நாட்டினுள் வருகின்றது. இதைவிட மிகை உற்பத்திகள், சர்வதேச சந்தையில் தேங்கிப் போனவையே நாட்டினுள் கொட்டப்படுகின்றது. அதையும் கடனாகத் தலையில் கட்டிவிட்டு, பின் வட்டி வசூலிப்பதும் கூட ஒரு இறக்குமதியின் அடிப்படைக் கூறாகி உள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE