Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _4.jpg"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" - தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்களப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்தப் பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிசத் தமிழீழமே எமது இலட்சியத் தாகம் எனப் பிரகடனம் செய்தனர். பிறகு அதையே புலிகள் தமது சொந்தக் கைகளால் புதைகுழிக்குள் அனுப்பிய வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பாத மந்தைக் குணம் கொண்ட தமிழ் சமுதாயத்தில் இருந்து தான், புதுவை இரத்தினதுரை கதை சொல்லுகின்றார். தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களின் காதுக்கும் பூ வைக்க முனையும் ஒரு மோசடிதான் இது. அன்று அன்ரன் பாலசிங்கம் ரொக்சிய கட்சியில் இருந்து பெற்ற திரிபுவாத அரசியலை அடிப்படையாகக் கொண்டு, புலிகளுக்கு இடதுசாயம் பூச முயன்றவர். புலிகளின் கொள்கை வகுப்பாளராக தன்னைத் தான் பாராட்டிக் கொண்டவர்கள். தளத்தில் புலிகளின் கொள்கை வகுப்பாளராக இருந்த மு.நித்தியானந்தன், புலிகளின் பத்திரிகையில் சொந்த நடைமுறைக்குப் புறம்பாகவே மாவோவின் மேற்கோள்களை அச்சிட்டு இடது சாயம் தெளித்து மக்களை ஏமாற்ற முயன்றவர். புலிகளுக்கு ஒரேயொரு ஆயுள் தலைவர் இருப்பது போன்று, கொள்கை வகுப்பாளரும் ஒரேயொருவர் மட்டுமே இருக்க முடியும் என்ற அடிப்படையில், மு.நித்தியானந்தன் கழித்து விடப்பட்டார். இதனால் புலி எதிர்ப்பாளராக வெளிவந்த மு.நித்தியானந்தன், காலத்துக்கு காலம் புலிகளின் நிலைக்கு ஏற்பத் தாளம் போட்டு தனது பிழைப்புக்கு ஏற்ற  நிலைப்பாட்டை நடத்தி வருகின்றார்.

book _4.jpgபேச்சு வார்த்தையின் ஆரம்பத்தில் இடைக்கால நிர்வாகச்சபை என்பதைப் புலிகள் கோரவில்லை. அதை எள்ளி நகையாடினர். அமைதி சமாதானப் பேச்சின் ஊடாக நிதி, தமக்கே கிடைக்கும் என்ற அடிப்படையில் இடைக்கால நிர்வாகச் சபையை நிராகரித்தனர். ஆனால் நிதி கிடைப்பது என்பது ஒரு நிர்வாக அலகின் ஊடாகவே சாத்தியம்  என்ற நிலையில் தான், இடைக்கால நிர்வாகம் என்ற பேச்சுவார்த்தையை முன்வைத்தனர். பாலசிங்கம் இதை ~~வடக்கு - கிழக்கு இடைக்கால நிர்வாகம் அவசியமென புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரேரிப்பதற்குக் காரணமாக அமைந்த விடயங்கள் அல்லது அத்தகைய விரக்தியை ஏற்படுத்திய சூழ்நிலைகள்| குறித்து ஹெல் கிஸன் மூலமாக நான் அனுப்பிய கடிதத்தில்|| காணக் கோரும் அடிப்படையில் தான், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை||க்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தனர் என்று கூறியுள்ளார்.

book _4.jpgஅமைதி சமாதானம் என்ற பெயரில் மக்களின் உரிமைகளை ஏலம் விட்டபோது, முஸ்லீம் காங்கிரசையும் அது விட்டுவிடவில்லை. இந்த யுத்தம் மற்றும் அமைதி வழிமுறையில் சிக்கிய அனைத்துத் தமிழ் முஸ்லிம் சிங்களக் கட்சிகளையும் குழுக்களையும் கூட, அதிகாரப் போட்டியின் எல்லைக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் இட்டுச்சென்றுள்ளது. மக்களின் அடிப்படையான தேசிய நலன்களை ஏகாதிபத்தியத்துக்குத் தாரைவார்க்கின்ற நிலையில், இதனுடன் சம்மந்தப்பட்ட குழுக்கள் தம்மை மூடிமறைத்த போது, அதிகாரப் போட்டியை முன்நிறுத்தி அதற்குத் துரோகம் அல்லது தியாகம் என்ற முத்திரையைப் பதிக்கின்றனர். எதார்த்த சமூக உண்மைகள் இதன் மூலம் மறைக்கப்பட்டு, தமது அற்ப அரசியல் கோஷ்டி சண்டைகளுக்குள் மக்களின் உரிமைகளைப் புதைத்துவிடுகின்றனர்.

book _4.jpgஇந்த அதிகாரப் போட்டிக்கான அடிப்படை என்ன? எதிர்காலத்தில் இலங்கையில் ஏகாதிபத்தியம் உருவாக்கும் அமைதித் தீர்வில் அல்லது யுத்தத்தில் தம்முடன் முரண்பட்ட பிரிவுகளை ஒழித்துக்கட்டும் ஒரு வடிவமாகவே இந்த நாடகம் அரங்கேறுகின்றது. புலிகள் துப்பாக்கி முனையில் நடத்திய அழித்தொழிப்பு அரசியல், கொஞ்சம் மாறுபட்ட நிலையில் ஜனநாயகத்துக்குப் புறம்பான வழிகளில் அடாத்தாகவே நடத்தப்படுகின்றது. சந்திரிக்கா அம்மையார் வழியில் இது அரங்கேறுகின்றது. எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டல் மூலம்,

book _4.jpgகடந்த 50 வருடங்களாக யூ.என.;பி. மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிகளுக்கு இடையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டம், இனவாத அரசியலாகவே எப்போதும் நடைபெற்றது. தமக்கு இடையில் உள்ள அரசியல் வேறுபாடுகளை எப்போதும், சிறுபான்மை மக்களை ஒடுக்குவதன் மூலம் வெளிப்படுத்தினர். ஒன்றை மாறி ஒன்று தொடர்ச்சியாக, அதி தீவிரமான சிங்கள இனவாத தேசியத்தைக் கட்டமைத்து, சிறுபான்மை இனங்களை ஒடுக்கவே ஆட்சிக்கு வந்தன. இதன் தொடர்ச்சியில் சந்திரிகா - ரணில் என்ற இரண்டு அதிகார மையங்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியுள்ளது.

book _4.jpgசி ங்கள மக்களின் சார்பாக இனவாதிகள் கட்டமைத்து உருவாக்கிய இன  ஒடுக்குமுறை, தமிழ் மக்களுக்கு எதிரான இனத் தேசியமாகியது. அதே இனவாதிகளால் இன்று திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கும் சமாதானம், அமைதி பற்றி, ஆளுக்கொரு அறிக்கைகள்  மற்றும் பேரங்களையும் முன்வைக்கின்றனர். இந்தச் சமாதான நாடகத்தை சிறுபான்மைத் தமிழ் மக்கள் சார்பாக, புலிகள் தமது தரப்பில் நின்று முன் வைத்ததாக உரிமை கோரினார்கள்.  சமாதானம் - அமைதியின் பிறப்பு ஏகாதிபத்திய நாடுகளால் சிங்கள இனவாதிகளின் ஆசியுடன் திட்டமிடப்பட்டது. இவை அனைத்தும் ஏகாதிபத்திய நலன்களில் இருந்தே திணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இனவாதிகள் தமக்கு இடையிலான ஆளும் வர்க்க நலன்களைத் தக்கவைக்கவும், கொள்ளை இடவுமே அமைதி மற்றும் சமாதானத்தை இழிவாகவும் கேவலமாகவும் பயன்படுத்துகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல் குறுந்தேசியமாகி, அதுவே குழு நலனாகிப் போன நிலையில், அதன் சொந்த பலவீனங்களையும் கையாலாத்தனத்தையும் மிகக் கேடாகவே சிங்கள இனவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

book _4.jpgபுலிகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான அரசியல் பொருளாதார உறவு என்பது, இனவாத அரசு கையாளும் உறவுக்கு முரணானது அல்ல. உலகமயமாதல் நிகழ்ச்சியில் அக்கம்பக்கமாக, வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் ஒருவரையொருவர் தூக்கிவிடும் கொள்கையையே புலிகளும், இனவாதச் சிங்கள அரசும் கைக்கொள்கின்றன. இவர்களுக்கு இடையில் அடிப்படையில் என்ன முரண்பாடு உண்டு? தமிழனை அடக்கியாண்டு உலகமயமாக்கத்துக்கு மேலும் விசுவாசமாக யார் இருப்பது என்பதே. இந்த  இடத்தில் ஏகாதிபத்தியம் தனக்கு விசுவசமான இந்த இரண்டு நாய்களையும் எப்படி சமாதானப்படுத்தி, ஒரேவீட்டில் காவல் காக்க வைக்கலாம் என்ற தனது நரித்தனத்தற்காக சமாதானம் அமைதி என்று கூறி ஒற்றுமைப்படுத்தும் களத்தில் இறங்கியுள்ளன. கடந்த இரண்டு வருடத்துக்கும் அதிகமாக நடக்கும் இழுபறியான நீடித்த நிகழ்ச்சி நிரலில், ஏகாதிபத்திய நலனைக் கடந்து வெளியில் எதுவும் நடக்கவில்லை.

book _4.jpgபுலிகள் தம்மைத் தாம் ஏகப்பிரதிநிதியாக்க, இயக்கம் தொடங்கியது முதலே தணியாத தாகமாகக் கொண்டே அலைகின்றனர். படுகொலை அரசியல் மூலம் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக இருக்க, கடந்த 25 வருடமாக எடுத்த எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை. அவை அனைத்தும் தோல்வி மேல் தோல்வியாகவே முடிந்தது. சில ஆயிரம் பேரைப் படுகொலை செய்த இரத்த வேள்வியால் கூட, ஏகப்பிரதிநிதித்துவக் கோட்பாட்டு அரசியல் தோல்வியேபெற்றது. மாறாக இதற்கு எதிரான குழுக்கள், கட்சிகள் இரத்த வேள்வியின் தொடர்ச்சியிலும் பிறப்பெடுத்தது. எதிரி இதைத் தனக்குச் சாதகமாக்கி தனக்கான குழுக்களை உருவாக்கும் கொள்கைக்கு, புலிகளது ஏகப்பிரநிதித்துவ அழித்தொழிப்புக் கொள்கை உதவத் தொடங்கியது. தொடர் படுகொலைகள் மூலம் ஒழித்துக்கட்டும் இராணுவ அரசியல், படுதோல்வி அடைந்ததைத் தவிர எதையும் சாதிக்கவில்லை. இதை உலகளவில் உள்ள மக்களின் அனைத்து எதிரிகளும் பயன்படுத்திக் கொண்டனர், கொள்கின்றனர். தமிழ் மக்களை அடக்கியொடுக்கக் கூடிய எந்த ஒரு நிலையிலும், ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுக் குழுக்களைப் புலிகள் ஏகாதிபத்திய நலனுக்கு இசைவாக உருவாக்கிக் கொடுத்துள்ளனர்.

book _4.jpgபுலிகளின் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கடுமையான தொடர்ச்சியான சில நெருக்கடிகளை, சமாதானம் மற்றும் அமைதி மீது ஏற்படுத்தியது. இந்தக் கப்பல்கள் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றி இறக்குவது தெரிந்ததே. ஆனால் பிரபாகரன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இதைத் தடுக்கின்ற போதும், இதை அடிக்கடி அவர்களே மீறினர். 

book _4.jpgபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை புலிகள் கையெழுத்திட்ட நிலையில், அதை அவர்கள் கடைப்பிடிப்பதில் உள்ள நேர்மை வழமை போல் சந்திக்கு வருகின்றது. இதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை வலிய உருவாக்கியதுடன், அதை சொந்தக் கழுத்தில் கைவைக்கும் அளவுக்கு பலதடவை உலக ஏகாதிபத்தியங்களை இலங்கைப் பிரச்சினையில் தலையிட வைத்தன. வழமை போல் மக்களின் பெயரால், இனம் தெரியாத நபர்களின் பெயரால், முகவரியற்ற அமைப்புகளின் பெயரால், மூன்றாவது குழுவின் பெயரால் பல நூறு சம்பவங்கள் நடத்தினர். மோதல்கள்;, படுகொலைகள் என்று தொடரும் ஒவ்வொரு முரண்பாடும், புலிகளால் யுத்தத்திலிருந்து மீண்டு விட விரும்பும் முடிவுக்கு சென்று விட முடியவில்லை. மாறாக யுத்தத்துக்குள், மீண்டு விட முடியாத புதைகுழியில் புதைந்து செல்வதையே ஆழமாக்கியது.

book _4.jpgகிழக்கில் அன்றாடம் முஸ்லிம் மக்களுக்கு எதிரான புலிகளின் வரி விதிப்பு பதற்றத்தை உருவாக்கின்றது. புலிகள் கேட்பதைக் கொடுக்கத் தயாரற்றவர்கள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்படுகின்றனர். இனம் காணப்படும் நபர்கள் மேலான குண்டு வீச்சுகள், பொருட்கள் மீதான குண்டு வீச்சுகள், தீர்த்துக் கட்டுதல், இனம் காணப்பட்ட நபர்களை கடத்திச் செல்லல், பொருட்களைக் கடத்துதல் என்று புலிகளின் அன்றாட நிகழ்வுகள் மேலான பதற்றத்தின் முடிவும், சமூகம் மேலான வன்முறையாகின்றது. வழமை போல் புலிகள் இதற்கும் தமக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று வெள்ளையாகவே அறிக்கை விட்டபோதும் உண்மை இதற்கு நேர்மாறானது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE