Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _1.jpgஇயற்கையான உலகில் ஒரு சில இத்தாலிய மனிதர்கள் உருவாக்கிய வத்திக்கானும், அதை நிர்வகிக்கும் சர்வாதிகாரியான போப்பாண்டவரும், இந்த உலகில் இல்லை என்றால் உலகம் இயங்காதா? உலகம் அழிந்து போய் விடுமா? போப் இல்லை என்றால் உலகம் அழிந்து போய்விடும் என்று, உலகில் யாரும் நம்புவதில்லை. இயற்கையும், மனிதனின் எதார்த்த வாழ்வியலும் இந்த உண்மையை எடுத்தியம்புகின்றது. இந்த உண்மையான எதார்த்த உலகத்தில் எதற்காக மரணித்து போன போப்புக்காக இந்தளவு கூத்துக்களைச் சிலர் நடத்துகின்றனர். மிகவும் கிறிஸ்துவ பக்தியுள்ளவனும் சரி, நிஜமாகவே இயற்கைக்கு வெளியில் கடவுள் இருக்கிறான் என்பதை நம்புகின்ற ஒருவனும் சரி, போப்பாண்டவரும் அவரை உருவாக்கிய வத்திக்கானும் இல்லை என்றாலும், உலகமும் இயற்கையும் இருக்கும் என்றே நம்புகின்றான். அப்படித்தான் அவன் இயற்கையில் வாழ்கின்றான்.

book _1.jpg"தமிழீழத் தேசியத் தலைவரின் ஆசியுடன் வெற்றி நடைபோட்ட வெக்ரோன் தமிழ்த் தொலைக்காட்சி சேவையானது நிறுத்தப்படுகின்றது என்பதனைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு. வெக்ரோன் உரக்கச் சொல்லும் உலகுக்கு.'' என்ற அறிவித்தலுடன், 27.4.2005 முதல் வெக்ரோன் தனது இலவச தொலைக்காட்சியைத் திடீரென நிறுத்தியது.


நிறுத்துவதற்கான காரணத்தைப் பூசிமெழுகிய வடிவில் புதைச்சேற்றில் புதைத்தனர். இந்தப் புதைச்சேற்றை மூடும் முன்பு அவர்கள் கூறிய காரணம் கூட, தமிழினத்தின் ஜனநாயகத்தை இட்டு சிறிதும் அக்கறையில்லாத வகையில், ஜனநாயக விரோதிகளின் விருப்புக்கு ஏற்றதாகவே புனைந்து காட்டினர். அவர்கள் இடை நிறுத்தத்துக்குக் கூறிய காரணத்தில்,

book _1.jpgதம்மைத்தாம் இலக்கிய ஜாம்பவான்களாகக் காட்டிக் கொள்ளும் பலரும் கூடியிருந்த கலைச்செல்வனின் மரண வீட்டில் இலக்கியத்தின் ஆளுமை மட்டுமின்றி, அதன் போலித்தனமான பொய்மையும் அம்பலமானது. ஒரு மரணம் இயல்பாக ஏற்படுத்தும் சோகத்தில் இவர்கள் நீச்சல் அடிக்க முடிந்ததேயொழிய, இலக்கிய உலகம் கலைச்செல்வன் இழப்பால் இழந்துவிட்டதாகக் கருதும் ஏதோ ஒன்றில் இருந்து, இந்த இலக்கிய இழப்பை உணர்வுபூர்வமாக எதையும் பிரதிபலிக்க முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தையே சிதைக்கும் வழிபாட்டுப் பண்பாட்டில், விமர்சனம் சுயவிமர்சனமின்றி இலக்கிய உலகம் மாமனிதர்களை உருவாக்கும் கற்பனை சொக்கிக் கிடந்தது.

book _1.jpgஉ தவி பற்றி வாய்கிழிய பீற்றப்பட்டு நடத்தும் அரசியல், வெட்கக்கேடான வகையில் பொய்களில் முகிழ்கின்றது. ஏகாதிபத்திய உதவி என்பது, வாங்கிய கடனுக்கு வட்டியை மீளக் கொடுப்பதையும், புதிய கடனை வாங்குவதையும் உறுதி செய்வதைத்தான் அடிப்படையாக கொண்டது. ஏகாதிபத்திய நலன்களை அடிப்படையாகக் கொண்டே உதவிகள் வழங்கப்படுகின்றன. இது கொடுக்கும் உதவியை விட, அதிகம் எடுத்துச் செல்வதை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு வெளியில் ஏகாதிபத்திய உதவி என்று எதுவும் கிடையாது. இதையே அண்மைய சுனாமி பின்பான ஏகாதிபத்திய வக்கிரங்கள் மறுபடியும் நிறுவியுள்ளது.

book _1.jpgசு னாமி ஏற்படுத்திய சமூகச் சிதைவுகளையே மிஞ்சும் வகையில், இடைத்தரகர்களின் வக்கிரம் அந்த மக்களின் வாழ்வியல் உரிமையையே இல்லாததாக்குகின்றது. ஒருபுறம் பாதிக்கப்பட்ட மக்கள், மறுபுறம் பாதிக்கப்படாத மக்கள் என்று இருதளத்திலும் இந்தச் சமூக அவலம் அக்கம் பக்கமாகவே நிகழ்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களும், பாதிக்கப்படாத மக்களும் கூடிவாழும் வாழ்வியல் உரிமையையே இடைத்தரகர்கள் தமது அதிகாரங்கள் மூலம் மறுக்கின்றனர். மக்களுக்கு இடையில் இந்த இடைத்தரகர்கள் பெருமளவில் பெருகியுள்ளதுடன், ஒரு ஒட்டுண்ணியாகி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதிக்கப்படாத மக்கள் கொடுத்த உதவிகளின் பெரும்பகுதியை, இந்த இடைத்தரகர்கள் சூறையாடிக் கொள்கின்றனர்.

book _1.jpgஒ ரு தேசத்தின் வாழ்வியல் விதியைக் குறித்து ராஜனி திராணகம தனது படுகொலைக்குச் சில நாட்களின் முன்பே எழுதினார். "எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கின்றோமோ அப்போதெல்லாம் இந்த எதார்த்தத்திற்குள் நாமும் புதைந்து போய் விடுகிறோம். புத்தி சுவாதீனத்தின் மெல்லிழையையும் இழந்து, எந்தவிதமான எதிர்ப்புணர்வுமின்றி இந்தப் பயங்கரவாத வன்முறைப் புதைகுழிக்குச் சமூகம் இடங்கொடுத்துவிடப் போகிறதோ என்றும் நாம் அஞ்சுகின்றோம். மனித ஆளுமைகள், ஆற்றல்களை எல்லாம் பறிகொடுத்துவிட்ட நிலையில் சமூகம் இருக்கின்றது. ஒவ்வொரு புத்தியுள்ள மனிதனும் எரிந்து கொண்டிருக்கும் இந்த தேசத்தைவிட்டு ஓடிக் கொண்டிருக்கிறான். எங்கள் மருத்துவமனைகளில் வைத்தியர்கள் இல்லை. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் இல்லை. எஞ்சினியர்களோ மேசன்மாரோ அல்லது வேறு தொழிலாளர்களோ இல்லாததால்... அவர் தொடர்ந்து எழுதும் போது

நட்புடன் அனைவருக்கும்


காசி பதில் அளிப்பது அளிக்காமை பற்றி எல்லாம், நான் தெரிந்து கொண்டு வாதத்தில் ஈடுபடுவது கிடையாது. அது போல் கம்ய+ட்டர் நுணுக்கங்கள், கள்ள வேலைகள் என எல்லாம் தெரிந்து கொண்டு விவாதத்தில் ஈடுபடுவதும் கிடையாது.

book _1.jpgஎ மது தமிழ்ச் சமூகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான ஆக்கிரமிப்பைக் கூட கொச்சைத்தனமாகவே புரிந்து கொள்வது நிகழ்கின்றது. தமது குறுகிய அரசியல் நலன்களுக்குள் இதைப் பகுத்தாய்வதும், விளக்குவதும் நிகழ்கின்றது. வரைமுறையற்ற பாசிச வன்முறையில் மலடாகிப் போன எமது சமூக அறிவியல், எதிரியைக் கூட சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கொச்சைத்தனமாகப் புரிந்து கொள்வது நிகழ்கின்றது.

book _1.jpgதெ ன்கிழக்காசியாவில் உருவாகிய சுனாமி என்ற கடற்கோள், பல பத்தாயிரம் மக்களை உயிருடன் இழுத்துச் சென்றுள்ளது. மனித உழைப்பால் உருவான மனித நாகரீகம் இடிபாடுகளாகிவிட்டது. நிலத்தையும் கடலையும் பிரிக்கும் எல்லைகள் பிணக் குவியலாக மாறிவிட்டது. சேறும் சகதியுமாகிப் போன பூமியின் ஒரு பகுதியில், புதையுண்ட சடலங்கள் பூமியூடாக எட்டிப் பார்க்கின்றன. மனிதக் கண்கள் என்றுமே கண்டறியாத இயற்கை அழிவாக எம்முன் இவை நிற்கின்றன. இந்த நிலையில் சிதைந்து போன இயற்கையை, மனித ஆற்றல் ஈடுகொடுத்து மீட்க முடியாது திணறும் நிலைமையை இந்தச் சமூக அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

book _1.jpgபொ துவான சமூகச் சூழல் ஜனநாயகத்தை ஆதாரமாகக் கொள்ளாத வரை, ஒரு மனிதன் சரியான பாதைக்குத் திரும்பி வரும் சூழலை உருவாக்காதவரை, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியலை முன்வைக்காத வரை, பிற்போக்கான நடைமுறைகளையும் அந்த அரசியலையும் விமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது.


இன்று கொலைகளே அனைத்துக்குமான சமூகத் தீர்வாகிப் போன தமிழ்ச் சூழலில், அதை இரசித்தும் ஆதரித்தும் வக்கரிக்கும் தமிழ்ச் சமூகத்தில், சமூக அக்கறையுள்ள ஒருவனின் தவறான பாதைகளை விமர்சித்து திருத்த முடியாது சமூகமே வக்கற்றுப் போகின்றது. இங்கு தனிமனிதனின் தவறுகளை மட்டும், நாம் தனித்து விமர்சிக்க முடியாது. கொலைக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ச் சமூக அடித்தளத்தையே விமர்சிக்க வேண்டியுள்ளது.

book _4.jpgஇலங்கையில் யுத்தத்தின் பின்னான அமைதியும் சமாதானமும், பண்பாட்டுச் சிதைவைத் தமிழ்ப் பிரதேசங்களில தேசிய மயமாக்கியுள்ளது. எங்கும் பணமும், பணப் பண்பாடுகளுமே அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளது. இந்தப் பணம் உருவாக்கிய ஆடம்பரம், அந்தஸ்த்து, திமிருடன் கூடிய வக்கிரம், சிறுபான்மையினரின் பண்பாக இருந்த போதும், அவர்களே சமூகத்தின் முழுமையையும் தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.


 இந்தப் பண்பாட்டுக் கலச்சாரச் சிதைவு தமிழ் பிரதேசங்கள் எங்கும், இலங்கைத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் பொதுவாக நடக்கின்றது. இந்தச் சிதைவு பொருளாதார ரீதியான சமூக ஏற்றத்தாழ்வின் இடைவெளி அதிகரிப்பால் தேசியமயமாகின்றது. இந்த சமூக ஏற்றத் தாழ்வு பொதுவாகவே இரண்டு தளங்களில் பிரதானமாக நடக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE