Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _1.jpg07. 07.2005 அன்று நடந்த ரி.பி.சி.யின் அரசியல் விவாதக்களம் தன்னை மற்றொரு புலி அமைப்பு தான் என்பதைப் பிரகடனம் செய்துள்ளது. நாம் கடந்த காலத்தில் புலியெதிர்ப்பு அணி மீதான எமது தொடர் விமர்சனத்தில் எதைச் சொன்னோமோ, அதை உறுதி செய்துள்ளது.


விவாதக் களத்தில் சுதந்திரம் என்பது ரி.பி.சி. கூறி வந்த கடந்த காலக் கருத்தாகும். ஆனால் திடீரென்று ரி.பி.சி. இதை மாற்றியுள்ளது. தனது நேயர்களுக்கு எதிராகக் கருத்துக் கூறமுடியாது என்று கூறி தொலைபேசி அழைப்புகளைத் துண்டித்தது. தமக்கு உதவ முடியாது என்று கூறுபவர்களுக்கு இனி இதில் இடமில்லை என்றனர். இதைத்தான் புலிகளும் செய்கின்றனர். அவர்கள் ஆயுதம் வைத்திருப்பதால், அதைச் சமூக மயமாக்குகின்றனர். உங்களிடம் ஆயுதம் இல்லாததால் உங்கள் அளவில் அதை மட்டுப்படுத்துகின்றீர்கள் அவ்வளவே.

book _1.jpgமு ஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம் அதிகாரம் செலுத்த முனைவதே, முஸ்லீம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் உருவாவதற்கான அடிப்படையாகும். இந்த உண்மையைத் தமிழர் தரப்பு எப்போதும் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது. பின்னர் விதாண்டவாதமாகவே தமது அடாவடித்தனங்களை நியாயப்படுத்துகின்றனர். இதன் மூலம் தமிழர் முஸ்லீம் விரோத உணர்வுகளை அன்றாடம் தீனிபோட்டு வளர்க்கின்றனர். இதுதான் சுனாமியின் பெயரில் உருவான பொதுக் கட்டமைப்பிலும் நிகழ்ந்துள்ளது. முஸ்லீம் மக்கள் எதைத்தான் கோருகின்றனர்? தமது சொந்தப் பிரச்சனையைத் தம்மிடமே விட்டுவிடும்படியே தமிழ் மக்களிடம் கேட்கின்றனர். இதற்கு இல்லை என்பதே, குறுந்தேசிய, தமிழ் தேசிய வீரர்களின் நிலைப்பாடாகும்.

book _1.jpgபு லிகளின் தமிழ்த் தேசியம் என்பது மற்றவனின் கழுத்தை வெட்டும் போராட்டமாகியுள்ளது. இதுவே புலிகளின் மைய அரசியல் நடைமுறை. மற்றவனைக் கொன்று போடும் எல்லைக்குள் தான், அதன் அரசியல் உணர்வு காணப்படுகின்றது. இதனால் ஏற்படும் சமூகச் சிதைவைப் பூசி மெழுகவே பட்டங்களை வாரி வழங்குகின்றனர். துரோகி என்றும் தியாகி என்றும் இரு அடைமொழிக்குள் அனைத்துச் சமூக நடைமுறைகளையும் துப்பாக்கி முனையில் நிறுத்தி சதிராட்டம் போடுகின்றனர்.


தமது சொந்த வர்க்க நலனுக்கு இசைவாக மனித இனத்தைப் பிளந்து அடையாளம் காண்பதன் மூலம், சமூகத்தையே துப்பாக்கி முனையில் அன்றாடம் பலியிடுகின்றனர்.

சில சுயாதீனமான மாற்றுக் கருத்து விவாத இணையத் தளங்களை குழப்பும் வகையில், சில அநாகரிகமான அராஜக செயல்பாடுகள் நடந்துள்ளன. அதில் தமிழரங்க இணையத்தில் இருந்த எனது சில கட்டுரைகளை அப்படியே பிரதி பண்ணி இணைப்பதன் மூலம்,

book _1.jpgபுலியெதிர்ப்பு அரசியலில் தான் ஜே.வி.பி.யும் உயிர் வாழ்கின்ற அரசியல் பரிதாபம், பேரினவாதமாகவே வெளிப்படுகின்றது.

தமிழ் இனத்தைச் சேர்ந்த புலியெதிர்ப்பாளர்கள் புலிகளின் மனிதவிரோத வன்முறைகளுக்குப் பின்னால், தம்மையும் தமது அரசியல் விபச்சாரத்தையும் தக்க வைக்கின்றனர் என்றால், ஜே.வி.பி.யின் அரசியலும் பேரினவாதமாகி அம்பலமாகி வருகின்றது. எல்லாவிதமான இடதுசாரி வேடங்களையும் களைந்து, தன்னைத்தான் நிர்வாணமாக்கி வருகின்றது. காலங் காலமாக தமிழ் மக்களுடன் செய்து கொண்ட எல்லா ஒப்பந்தங்களும், பேச்சு வார்த்தைகளும் எந்த அரசியல் வழிகளில் முறியடிக்கப்பட்டதோ, அதையே ஜே.வி.பி. மீண்டும் வரலாற்றில் அப்படியே கையாளுகின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான் அண்மையில் இலங்கையில் எழுந்துள்ள எதார்த்தம் பேரினவாதம் கொக்கரிக்க தொடங்கியுள்ள நிலையில், புலியெதிர்ப்பு தமிழ்ப் பிரிவு அதன் பின்னால் அரோகரா போட்டபடி காவடி எடுக்கின்றனர்.

book _1.jpgஜே.வி.பி. கட்சி ஒரு இனவாதக் கட்சியா? இல்லையா? என்ற அடிப்படையில் 12.5.2005 அன்று ரி.பி.சி. வானொலியில் ஒரு குதர்க்கமான விவாதத்தையே நடத்தினர். புலிகள் ஆதரவு நபர் ஒருவர் ஜே.வி.பி.யை இனவாதிகள் என்று கூற, ரி.பி.சி.யின் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் இனவாதிகள் இல்லவே இல்லை என்றார். இதற்கு ஆதரவாகத் தேனீ இணையத்தள ஆசிரியரும் களமிறங்கி பக்கப்பாட்டு பாடினார். இதைத் தொடர்ந்து இந்தக் கூத்தரங்கம் தொடருகின்றது.

book _1.jpgசி ங்களப் பேரினவாதம் மீண்டும் மீண்டும் தனது இனவாதக் கூத்துகளை நடத்தி, அதில் குளிர்காய்கின்றது. இதைத்தான் திடீர் புத்தர் விவகாரம் மறுபடியும் எடுத்துக்காட்டுகின்றது. மனித இனத்தை மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பந்தாடும் அரசியல் கூத்துகள் மூலமே, தமது சொந்த அதிகாரங்களை நிறுவி மனித இனத்தைச் சூறையாடுவதையே கறைபடியாத ஜனநாயகமாக்குகின்றனர். இந்த முயற்சியில் தான் திருகோணமலையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம். பொதுஇடங்களிலும், ஒரு பிரதேசத்தின் முக்கியமான மையங்களிலும் நிறுவப்படும் புத்தர் சிலை மூலம், எதைத்தான் இந்த மனிதச் சமூகத்துக்குச் சொல்ல முனைகின்றனர்?

book _1.jpgகருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வக்கற்ற புலிகளின் காடைத்தனங்களே, மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமது சொந்த நடத்தைகளையும், அரசியல் செயல்பாட்டையும் கூட உரிமை கோர முடியாத புலிகள், அன்றாடம் அதையே தமது சொந்த அரசியல் நடத்தையாகச் சமூகத்தின் மேல் கையாளுகின்றனர். அரசியல் அனாதைகளான புலிகளின் ஈவிரக்கமற்ற பாசிச நடத்தைகளையே, புனிதமானதாகவும் ஒழுக்கமானதாகவும் காட்டி கட்டமைத்த சமூகவிரோத வக்கிரங்களையே தேசியமாகப் புனைந்து காட்டுகின்றனர்.

சிவராம் படுகொலை செய்யப்பட்டான் யாரால்? எதற்காக? படுகொலை வரலாற்றில் இது முதலாவதும் அல்ல, இறுதியுமல்ல.


இயக்கத் தலைமைகள் தமது தலைமையைத் தக்கவைக்கவும், குறுந்தமிழ் தேசியத்தின் தற்பாதுகாப்பே படுகொலை அரசியலாக வளர்ந்தது. அது முதல், படுகொலைகளே அரசியல் ஆணையாக மாறியது. படுகொலைகளின் போது எதிர்தரப்பு குதூகலிப்பதும், மறுதரப்பு புலம்புவதுமாக, தமிழ்க் குறுந்தேசிய வரலாறு தொடருகின்றது. எங்கும் சூனியம் நெற்றியில் செதுக்கப்படுகின்றது.

book _1.jpgல ண்டன் ஜெயதேவன் விவகாரம், புலிகளின் வழமையான அவர்களின் அரசியல் வக்கிரத்தை மீண்டும் சந்திக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டதுடன் கூடவே துணைக்கு நோர்வேயும் தலையிட்டது. இதனால் தனிப்பட்ட அவர் புலிகளின் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து பிரிட்டிசுக்குத் திரும்ப முடிந்தது. தொடர்ந்து புலிகளுக்கு எதிராகத் தனது சுயவிமர்சனத்தை அல்ல, பிரச்சாரத்தை ரி.பி.சி. வானொலியூடாகச் செய்ததுடன், அதைச் சர்வதேச ரீதியாக எடுத்துச் செல்லுகின்றார். சர்வதேசத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாக இது உள்ளது. தம்மைத் தாம் அப்பாவிகளாகக் காட்டியபடி நடுநிலையாளராக தமது வேஷத்தைப் போட்டு, சூடு சுரணையற்ற வகையில் புலிகளுடன் கூலிக் குலாவுபவர்கள் கனவுகளையே, இப்புலியெதிர்ப்பு பேட்டி அதிரவைத்துள்ளது. மனித நம்பிக்கைகள் எல்லாம் சிதறிக்கப்பட்ட நிலையில், புலியெதிர்ப்பு அரசியலில் குளிர் காய்வதில் ஈடுபடும் புலியெதிர்ப்பு பிரிவினர், ஜெயதேவன் விவகாரத்தைப் போட்டிபோட்டு செய்தியாக முன்னிலைப்படுத்தி வெளியிடுகின்றனர்.

இந்த இணையத்தளம் மக்களின் வாழ்வியல் உரிமை சார்ந்த, சமூக உண்மைகளுக்காக போராடுகின்றது. இந்தப் போராட்டத்தில் நாம் எமது கருத்துச் சுதந்திரத்தை தக்கவைக்கும் ஒரு போராட்டமும், இதில் ஒரு அங்கமாகிவிடுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE