Language Selection

பி.இரயாகரன் - சமர்

மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு (HUMAN RIGHTS WATCH) கனடா மற்றும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மீதான புலிகளின் நிதி அறிவீடு பற்றிய ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

பிரான்சில் மாணவர் போராட்டம் மூலதனத்துக்கும் அதன் எடுபிடியாகவுள்ள அரசுக்கும், மீண்டும் தனது அரசியல் பாடத்தை புகட்டத் தொடங்கியுள்ளது. தன்னியல்பான இப் போராட்டம் இயல்பில் அனைத்துவிதமான அரசியல் துரோகங்களையும் அம்பலப்படுத்தி

தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது.

அண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர். இதைத் தான் எனக்கு பிரஞ்சு ஏகாதிபத்தியம் உத்தியோகபூர்வமற்ற வகையில் கூறுகின்றது. அவர்கள் கூறியதற்கு பின்னால் எதிர்வினையின்றி, நிலைமை அமைதியாகவே உள்ளது.

சிலர் எமது விமர்சன மொழி பற்றியும், விமர்சனப் பண்பாடு பற்றியும், விமர்சன நாகரிகம் பற்றியும் கூட எம்முடன் முரண்படுகின்றனர். நாம் ஒருமையிலும் அஃறிணையிலும் (சிலரைக் குறித்து) விவாதிப்பதையும், மிருகங்களுடன் ஒப்பிட்டு எழுதுவது

இது தான் அண்மையில் சுவிஸ்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாரம். இப்படிக் குறிப்பிடுவதை இட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவ்வளவுதானா பேச்சுவார்த்தை? இவ்வளவு தான். 2001 இல் நடந்த பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்த நடந்த நிகழ்வு இதைத்தான் எமக்கு கற்றுத் தந்துள்ளது. கருணா விவகாரத்துக்கு முன்னம் நடந்த தொடர் கொலைகள் அனைத்தும், யார் எதற்காக ஏன் செய்தார்கள்? இந்த தொடர் கொலைகள் மூலம் தமிழ் சமூகத்தையே அச்சுறுத்தி சாதித்தது என்ன?

எமது விமர்சனத்தின் தன்மையையொட்டி புலியெதிர்ப்பு அணியினர் எம்மீது ஆத்திரம் கொள்கின்றனர். தமது மோசடி அம்பலமாவதால், கண்ணை மூடி ஆதரித்த தமது அணிகள் விழிப்புற்று கேள்வி கேட்பதால் இது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது.

ஜனநாயகம் சார்புத் தன்மையானது என்பதை நிறுவும் முயற்சியில், புலியெதிர்ப்பு அணியின் முயற்சிகள் சந்தியில் தலை விரிகோலமாகி வருகின்றது. புலிகளிடம் ஜனநாயகத்தை கோரும் புலியெதிர்ப்பு அணி, தமக்கு அது பொருந்தாது என்பதையே ராம்ராஜ் விடையத்தில் மீண்டும் நிறுவிக் காட்டமுனைகின்றனர்.

பாசிசம் தனக்கு அரசியல் முலாம் ப+சக்கூடிய ஒருவர் மூலம் களத்தில் இறங்கியுள்ளது. எதிராளிக்கு எதிரான தமது பாசிச நடத்தையை, முதல் முதலாக ஜனநாயகத்தின் ஒரு கூறாகத் காட்டத் தொடங்கியுள்ளது. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது திணறுவதும் புலம்புவதும் நிகழ்கின்றது. ஜெயதேவனுக்கு எதிராக ஈழம் வெப் இணையத்தில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு எதிராக தேனீ இணையத்தளத்திலும், ரி.பி.சியிலும் விவாதிக்கப்பட்டது. சபேசன் என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவரின் சொந்தப் பெயரில் சொந்த இணையத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒருபுறம் சபேசன் புலிப்பினாமியாக நாய் வேசம் போட்டுக் குலைக்க, ஜெயதேவன் கும்பல் பனங்காட்டு நரி வேஷம் போட்டு ஊளையிடுவதுமே விவாதமாகியது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE