Language Selection

பி.இரயாகரன் - சமர்

 தனிமனித செல்வக் குவிப்பு, அமெரிக்காவில் உயர்ந்த கட்டத்தை அடைந்துள்ளது. 2004இல் அமெரிக்காவின் முதல் 500 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வருடாந்தரம் குறைந்தபட்சம் ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பளமாக பெற்றனர். மிகப் பெரிய 25 நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்த பட்சம் 3.5 கோடி டாலரை சம்பளமாக பெற்றனர். இதை எங்கிருந்து எப்படி பெறுகின்றனர் என்றால் மக்களின் அன்றாட உழைப்பு தான்.

 1995இல் கம்ப்யூட்டர் துறையில் (தீடிணஞீணிதீண்) வின்டோஸ் 95யும், 98யும் ஏற்படுத்திய தாக்கம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் எழுச்சியும் தொடர்ந்த வீழ்ச்சியும் தனிப்பட்ட முதல் பணக்காரனின் தனிப்பட்ட சொத்துக்களைக் குறைத்த போதும், தொடர்ந்து அது சீராகி வருகின்றது. அதைத் தொடர்ந்து தொலைபேசியும், நவீன சந்தைக் களத்தில் சதிராட்டம் போடுகின்றது. வக்கரித்த நுகர்வு வெறியும், கவர்ச்சியும் ஏற்படுத்தும் தாக்கம் சந்தையையே தலைகால் தெரியாது வீங்க வைக்கின்றது. இது பற்றாக்குறையையும், தேக்கத்தையும் அடுக்கடுக்காக கொண்டு வருகின்றது.

 2000இல் அமெரிக்காவைச் சேர்ந்த 400 முன்னணி பணக்காரக் கும்பல் அரசுக்கு கட்டிய வரி 7,000 கோடி டாலராக மட்டுமே  இருந்தது. இது 1992 உடன் ஒப்படும் போது இரண்டு மடங்காகியது. பணக்காரக் கும்பலுக்கு  ஏற்படும் வரி மூலமான இழப்பை குறைக்க கோரும் உள்ளடக்கம்தான், உலகெங்கும் வரி குறைப்பிற்கான நடைமுறை சார்ந்த சட்டத் திருத்தங்களை செய்கின்றனர். சிறப்பு வரிச்சலுகைகளை அமுல் செய்கின்றனர். அதாவது பணக்காரன் கட்டும் வரியின் அளவைக் குறைப்பதே, அடிப்படையான  ஜனநாயகமாகியுள்ளது. பணக்காரன் மேலும் பணக்காரனாவதை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட, வரி குறைப்பே இன்றைய உலகமயமாதல் வரிச் சட்டங்களாக உள்ளன.

 உலகமயமாதல் என்றால் என்ன என்ற பொருளை எதார்த்தம் நடைமுறையில் நிறுவுகின்றது. 1997க்கு பின் 100 கோடியை விட அதிக சொத்துடையவர்களின் சொத்து 66.4 சதவீதத்தால் அதிகரித்தது. இதன் மூலம் ஏழைகளின் அதிகரிப்பை உலகமயமாதல் இயல்பாகவே எடுப்பாக எடுத்து இயம்புகின்றது. ஏழைகளின் பிணங்களின் மேலான அஸ்த்திவாரத்தில்தான், நவீன உலகமயமாதல் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் வெட்டுமுகம் மிகவும் இழிவானது.

 செல்வங்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய தனிப்பட்ட நபர்களிடம் எப்படி எங்கிருந்து குவிகின்றது? உலகமயமாதல் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு இது ஒரு அடிப்படையான கேள்வியாகும். இதை ஒவ்வொருவரும் கேட்காத வரை உலகமயமாதலைப் புரிந்து கொள்ளமுடியாது. பணம் தனிப்பட்ட ஒருவனிடம் குவிகின்ற போது, மற்றவன் நிச்சயமாக அதை இழக்கவேண்டும், இழந்தேயாக வேண்டும். இது பணம் குவிதலில் உள்ள அடிப்படையான ஒரு இயங்கியல் விதி. இதை எடுப்பாகவும் இயல்பாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியாதவகையில், சூட்சுமமாகவே உலகம் காட்சியளிக்கின்றது.

 இப்படி மக்களைக் கொன்று புதைத்து உருவாகியுள்ள பணக்காரக் கும்பலே, உலக நாகரிகத்தின் உயர் சின்னங்களாகப் பவனிவருகின்றனர். இப்படி 1998இல் உலகில் உருவானவர்களில் முதல் மூன்று செல்வந்தர்களின் சொத்து 48 நாடுகளின் தேசிய வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. 1999 ஐ.நா அறிக்கை ஒன்றின்படி அடிப்படை சுகாதாரம், சத்துணவு, அடிப்படைக் கல்வி, குடிநீர், இனப்பெருக்கம் சார்ந்த சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த 4,000 கோடி டாலர் தேவை என்று கூறுகின்றது.

தனிமனிதர்களின் வாழ்வியல் பிளவுகளில் ஏற்பட்டுவரும்  இடைவெளிகளினால் ஏற்படும் மனிதஅவலம், சமூகப்   பிறழ்ச்சியாகி வக்கரிக்கின்றது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ச்சியாகவே பிளவுறுவதுடன், இவை விரிந்து அகன்று வருகின்றது. இது பல்வேறு சமூகப் பிரிவுகளில் வேறுபட்டு பிரதிபலிக்கின்றது. குறைந்த வருமானம் உடைய பொருளாதாரத்துக்கும் உயர் வருமானமுடைய பொருளாதாரத்துக்கும் இடையிலான தனிமனித வருமான பகிர்வு வீதம், 1970இல் 1க்கு 28 யாக இருந்தது. இது 1990இல் 1க்கு 50 யாக அதிகரித்தது. கிடைக்கும் வருமானம் பகிரப்படும் வீதமே, முன்பை விடவும் அகலமாகி வருகின்றது. செல்வத்தை நோக்கி செல்வம், காதல் கொண்டு பறந்தோடுகின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்தியம் சார்ந்தே விரிவாகின்றது.

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி, தமது இழிசெயலுக்கு துணைநின்ற மக்கள் விரோதிகளுக்கு "மாமனிதன்" என்ற பரிசு வழங்குகின்றார். அதேபோன்று தான் ஆனந்தசங்கரிக்கும் ஏகாதிபத்தியம் வழங்கியுள்ளது. "அகிம்சைக்கும் சகிப்புக்கும்" எடுத்துக்காட்டி, அதை ஊக்குவிக்க, இலங்கைப் பணத்தில் அண்ணளவாக ஒரு கோடிக்கு ஒரு பொன் முடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கோ, அவரின் கூட்டணிக்கோ இன்று தனித்துவமான சொந்த அரசியல் கிடையாது. அதனால் தான் இந்தப் பரிசுக்கு சிறப்பாக அவரை தேர்வு செய்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் அரசியலை ஆனந்தசங்கரி தன்வசப்படுத்தி, அதை தன்னுடைய அரசியல் திட்டமாக உலகுமெங்கும் முன்வைத்து வாலாட்டித் திரிவதால் தான், பரிசுக்குரிய நபராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழீழத்தின் பெயரில் நடந்தேறிய வலதுசாரிய பாசிசப் படுகொலைகளை, சாதியப் படுகொலையாக திரித்து சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல் தான் 'மறைவில் ஐந்து முகங்கள்". தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர் மீது நடத்துகின்ற சாதிப் படுகொலைகளே

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில்,

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE