Language Selection

பி.இரயாகரன் - சமர்

மக்களுக்கு எதிரான துரோகத்தை நியாயப்படுத்துவதே மாற்று அரசியல் என்று, புலியெதிர்ப்புக் கும்பல் நிறுவ முனைகின்றது. புலிகளிள் ஒவ்வொரு பல்லும் விழும்போது, துரோகமே மாற்று என்று நிறுவப்படுகின்ற அரசியல் வக்கிரம் ஒருங்கே அரங்கேறுகின்றது. வரலாற்றின் முரண்நிலை, இதுவாக இருப்பதாக காட்டப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் என்பது, இதுதான் என்று அறைந்து ஒட்டப்படுகின்றது. இது மீறப்பட முடியாத வகையில் ஊடகவியல் மாற்றுகள் அனைத்தையும் முடக்கி மலடாக்குகின்றது. இந்த வகையில் தமிழ் மக்களை கண்னை பிரித்து, சிந்திக்க நிர்ப்பந்திக்கின்றது.

ஜனநாயகத்துக்கும் பேச்சாளர்கள். கேடுகெட்ட ஒரு அரசியல் விபச்சாரம். புலிக்கு மட்டுமா பேச்சாளர்கள், இல்லை, கருணா தரப்புக்கும் தான் பேச்சாளர்கள். ஒரே பாணி அதே குட்டை. இதைச் சுற்றி இரண்டுக்கும் ஒரேவிதமான கோமாளித் தொண்டர்கள். எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் அரசியல் எடுபிடித்தனம். இவர்களின் திடீர் ஜனநாயகமோ எதையும் எப்படியும் கொத்திக் கிளறும், அமெரிக்க வகைப்பட்ட ஜனநாயகம்.

தமிழ் தேசிய யாழ் மையவாதம் மட்டுமல்ல, கிழக்கு மையவாதமும் பேரினவாதத்தினால் அழிக்கப்படும். பேரினவாதம் மட்டும் தான், மீண்டும் வெற்றி பெறும் எதார்த்தம். இதை நோக்கிய அரசியல் எல்லைக்குள் தான், அனைத்தும் மையப்பட்டு செயல்படுகின்றது. தமிழ் மக்களின் அழிவும் சீரழிவும், புலிகளால் மட்டுமல்ல கருணா தரப்பாலும், அதற்கு அப்பால் புலியெதிர்ப்பு கும்பலாலும், கிழக்கு மையவாதிகளாலும் கூட நடக்கின்றது. கிழக்கு வாழ் தமிழ் மொழி பேசும் மக்களின் தனித்துவமே திட்டமிட்ட வகையில் ஒழித்துக்கட்டப்படும். இதை நோக்கி ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. இதில் தமிழ், முஸ்லீம் என்று வேறுபாடுகள் எதுவும் இருக்கப் போவதில்லை. இந்த நிலைமையை குறைந்தபட்சம் புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் கூட, எந்த தரப்பிடமும் இன்று கிடையாது.

மனித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.

ஈராக்கில் உள்ள ஆக்கிரமிப்புப்படை ஓரு நிமிடம் விலகினாலேயே, ஆட்சியில் நீடிக்க முடியாத ஒரு கூலிக் கும்பலின் பெயரில், சதாமுக்கு வழங்கிய மரணதண்டனை. அமெரிக்கா மற்றும் பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்கள் ஊதும் மகுடிக்கு ஏற்ப ஜனநாயக வேசம் கட்டி ஆடுபவர்கள் தான் இன்றைய ஈராக்கிய ஆட்சியாளர்கள்.

இரக்கமேயற்ற எமது தமிழ் சமூகம். கண்ணை மூடிக்கொண்டு நித்திரை கொள்கின்ற சமூகம். எல்லாம் நன்றாகவே சிறப்பாகவே நடப்பதாக கூறிக் கொண்டு, குப்பிற வீழ்ந்து தொழுகின்ற சமூகம்.


தமிழ் இனத்தின் பெயரில் பட்டங்கள், பதவிகள், புகழ் உரைகள் ஒருபுறம். மறுபக்கம் தமிழ் இனத்தின் எதிரிகள் என்ற தூற்றும் பட்டங்கள். இவை எல்லாம் எதற்காக? சரி இந்த தமிழ் மக்கள் எப்படி வாழ்கின்றனர்! யாராவது ஒருத்தர் உண்மையாக சிந்திக்கின்றனரா? மனசாட்சியைத் திறந்து ஒருகணம் யோசிக்க நீங்கள் தயாரா? ஏன் மௌனம்? யாருக்கு ஏன் எதற்கு பயப்படுகின்றீர்கள்! பிறகு மக்கள் பற்றி பேச உங்களுக்கு என்னதான் தார்மீகப்பலம் இருக்கின்றது!

பேரினவாத சூழ்ச்சியும், பாசிசக் குண்டர்களின் யாழ் மேலாதிக்கமும் இணைந்து, தமிழ் இனத்தை கூறு போட்டு விற்கின்றனர். ஒரு இனத்தின், பிரதேச மக்களின், தனிமனிதனின் உரிமைகள் எதையும் ஏற்றுக்கொள்ளாதவர்களின், உள்நோக்கம் கொண்ட அரசியல் சதா மக்களுக்கு எதிராகவே அரங்கேறுகின்றது.

ஐயோ நாங்கள் ஐனநாயகவாதிகள், கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் நேர்மை உண்டு என்ற புலியெதிர்ப்பு கும்பல் புலம்புவது வழமை. ஆனால் நடைமுறையில் அதை மருந்துக்குக் கூட காணமுடியாது.

வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.

ஈழத்து மானுட துன்பவியல் என்பது, மரணித்தவரை போலியாக போற்றுவதாகின்றது. மனித இனத்துக்கு கேடு இழைத்தவர்களை எல்லாம், சமூக கதாநாயகராக வரலாற்றின் முன் காட்ட முனைகின்றனர். இப்படி அண்மையில் பாலசிங்கம் போல் மரணித்த இரத்தினசபாபதியின் மரணத்தை,

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE