Language Selection

பி.இரயாகரன் - சமர்

சமுதாய நலன்களையும் அதற்கான போராட்டங்களையும் தம்மால் செய்து காட்ட முடியாவிட்டால், உடனடியாக எடுபிடி லும்பன் அரசியல் வள்ளென்று குலைக்கத் தொடங்குகின்றது. இப்படி மக்களையும், அவர்களின் வாழ்க்கையும், கூட்டிக்கொடுப்பவன் விபசாரத் தரகன் தானே. மக்களின் வாழ்வியலைத் திட்டமிட்டு சிதைத்துக் கொண்டுடிருக்கும் கும்பலுடன், கூடிப்படுப்பவன் மாமா தானே!

போலியான வாழ்வு உருவாக்கும் உணர்வும் உணர்ச்சியும் எங்கும் எதிலும் இரட்டை வாழ்க்கை முறையை உருவாக்குகின்றது. உலகச் சந்தை தனது பொருளை விற்க எப்படி பகட்டாக நடிக்கின்றதோ, அப்படி மனித வாழ்வே நடிப்பாகிவிடுகின்றது. நம்ப முடியாத வகையில், இதுவே மனித வாழ்வியல் உறவுகளின் அங்கமாகிவிட்டது.

அதில் ஒன்று தான் புலியிசம். அது தன்னைத் தவிர அனைத்தையும் அவதூறாய் வைகின்றது., கொன்று போடுகின்றது. இதை நியாயப்படுத்தும் அறிவோ, நேர்மையோ கிடையாது. மாறாக சிந்தித்தால், மாற்றாக செயல்பட்டால், ஏன் கேள்வி கேட்டால், நியாயம் கேட்டால், அதை அவதூறு செய்து கொன்று போடுவதே புலியிசம்.

படுகொலை, கொள்கை கோட்பாடற்ற மாபியாத்தனம். தாம் ஏன், எதற்காக, எந்த இலட்சியத்துக்காக, எப்படி போராடுகின்றோம் என்பதை சொல்ல முடியாத கும்பல். இவர்களுக்கும் மனித குலத்துக்குமான உறவு என்பது, கடைந்தெடுத்த பாசிசம்.

அரசியலில் உள்ள பலருக்கு இது புரிவதில்லை. உண்மையில் இனச்சுத்திகரிப்பு என்பது பேரினவாதத்தின் கொள்கையாகும். கொழும்பில் புலிகளின் இருப்புக்கு காரணம் இந்த அரசு. இனப்பிரச்சனையை தீர்த்தால், புலிகளின் இருப்பு என்பது சாத்தியமில்லை. இதற்கு தடையான இந்த அரசை அல்லவா, நாம் விரட்டி அடிக்க வேண்டும்.

இனத் தன்மை வாய்ந்த பாசிசம் என்பது, இனத்தூய்மையையும் இனவழிப்பையும் முன்வைக்கின்றது. இலங்கையில் இது பலதரம் நன்கு நிறுவப்பட்டுள்ளது. பலர் கொழும்புச் சம்பவத்தை நாசிக்கால வரலாற்றுடன் ஒப்பிட, அவசரமாக கொடுக்கைக் கட்டிக்கொண்டு ஓடுகின்றனர்.

இலங்கையில் ஒரு சிங்கள பேரினவாத இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் மத்தியில் கூட, இந்த விடையம் உணரப்படவில்லை. அந்தளவுக்கு புலிப் பாசிசம் எதிர்முகம் காட்டி நிற்கின்றது. இந்த சிங்கள பேரினவாத பாசிச சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்த, புலிப்பாசிசமே தடையாகி நிற்கின்றது. தமிழ்பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமையை உருவாக்குவதற்கு, புலிப்பாசிசம் தடையாக நிற்கின்றது.

ஒரு பேப்பருக்காக எழுதியதாக குறிப்பிட்டு ஒரு செய்தியை, புலி வைரஸ் புலம்பியுள்ளது. http://sathirir.blogspot.com/2007/05/blog-post_31.html பிளக்கரிலும் இது வெளிவந்ததுள்ளது.

 

அதில் எனக்கு 'புலிக்காச்ச"லாம் அத்துடன் வேறு

அரசியல் ரீதியான தோல்வியை இராணுவ வெற்றியாக்கிவிட முடியாது. புலிகள் மீள யாழ்ப்பாணத்தை கைப்பற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் முதல் ஊதிப்பெருக்கும் செய்திகளுமே அண்மைய செய்திகளாகின்றன. அதற்கான தயாரிப்புகள் பற்றிய செய்திகளும், மிக பெரிய மனித அழிவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற புலியிஸ்சமும் சார்ந்த செய்திகளும் வெளிவருகின்றது.

இந்தியாவின் உளவு அமைப்பான றோவினதும், அதன் கூலிக் குழுவாகவுள்ள ஈ.என்.டி.எல்.எவ் இன் வானொலி தான் ரீ.பீ.சீ. இதை வெளிப்படையாக அறிவித்து இயங்குவது தான் குறைந்தபட்ச நேர்மை. அதைவிடுத்து, அதை மக்களுக்கு மூடிமறைத்து நடத்தும் அரசியல் சதி நீண்டகாலத்துக்கு நீடிக்காது. சதிக் கும்பல் தான் ரீ.பீ.சீ.

மற்றவனை ஒடுக்கவேண்டும், துன்புறுத்த வேண்டும் என்று விரும்பியோரின் வெற்றி தான், பிரான்சின் புதிய ஜனாதிபதியாகியுள்ள நிக்கோல சார்க்கோசியின் வெற்றியாகும். பிரான்சின் இந்த தேர்தல் முடிவுகள், இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலில் பல சமூக அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE