Language Selection

பி.இரயாகரன் - சமர்

குடும்ப அதிகாரம் என்பது அவசியமான எல்லைக்குள் மட்டுமானது. இது பரஸ்பரம் இணங்கியதாக, ஜனநாயகப் பண்பு கொண்டதாக அமைய வேண்டும். அதிகாரம் என்பது சமூகப்பொருளாதார உறவை குறைந்தபட்சம் உள்ளார்ந்த சமூக அடிப்படையில் புரிந்த எல்லைக்குள் தான், அது வெற்றிகரமாக குடும்ப உறுப்புகளால் இணக்கமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மனைவியும் கணவனும் தனித்தனியான உலகில் தமக்கிடையான முரண்பாட்டுடன் சஞ்சரிக்கும் போது குடும்பத்தில் என்ன நடக்கும். குழந்தையும் அப்படியே தனித்தனியாகவே வாழத் தொடங்குவதை பல பெற்றோர் உணருவதில்லை.

மக்களுக்கு துரோகம் செய்து, கொள்கை ரீதியாக சோரம் போனவர்கள் தான். மக்களுக்காக, அவர்களின் நலன்களை முன்வைக்க அரசியல் ரீதியாக வக்கற்று போனவர்கள். மக்களை பிறப்பில் வைத்தே பிளக்கும் நயவஞ்சகத்தைத் தவிர வேறு அரசியல் அற்றவர்கள், இவர்கள் தான்.

சர்வதேசியம் உலகளவிலானது. உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும். அவர்களின் விடுதலைப் போராட்டங்களை மட்டும் ஆதரிக்கும். பிற்போக்கானதும், மக்களுக்கு எதிரான எதையும் ஆதரிக்காது. இரண்டு முரண்பட்ட பிரிவில் ஒன்றைச் சார்ந்து நிற்க வேண்டிய அவசியம், கட்டாயம் அந்த வர்க்கத்துக்கு கிடையாது.

அறிவுபூர்வமாகவே இணங்கி வாழத் தயாரான குழந்தைகளை, அறிவற்றதாக்குவது யார்? மாடு மாதிரி தின்னப் போடுவதா, புண்ணாக்கு மாதிரி கல்வியைத் திணிப்பதா, பெற்றோரின் கடமை? இதை பூர்த்திசெய்வதே பெற்றோரின் பணி என்று நம்புவது, பெற்றோரின் அறிவிலித்தனமாகும்.

பெற்றோருடனான குழந்தையின் முரண்பாடு என்பது, பெற்றோரின் முரண்பாட்டில் இருந்து உருவாகின்றது. குழந்தை தான் விரும்பியதை சாதிக்க நினைப்பது, முரண்பட்ட பெற்றோரின் முரண்பட்ட முடிவுகளை அடிப்படையாக கொண்டது. கணவன் அல்லது மனைவியின் ஒன்றுபட்ட ஒரே முடிவை எடுக்க முடியாமையே,

இருவர் இணக்கத்தை அடைவதற்கான ஜனநாயக மனப்பாங்கின்றிய இணக்கமற்ற முரண்பாடுகள் என்பது, இன்று பல குடும்பங்களில் அடிப்படையான பிரச்சனையாகி உள்ளது. இணக்கத்தையொட்டி வாழ்வியல் மொழியைக் கூட சமூகம் இழந்து நிற்கின்றது.

கருத்தை கருத்தாக எதிர்கொள்ளும் புலியிசமும் கிடையாது. புலியெதிர்ப்பிசமும் கிடையாது. கருத்தைச் சொல்பவனைக் கொல்வது, விலைக்கு வாங்குவது, செயலற்ற வகையில் முடக்குவது, முடிந்தவரை மிரட்டுவது, இல்லாதுபோனால் பல குறுக்கு வழிகளில் அச்செயல்பாட்டை இல்லாததாக்குவது.

வாழ்வில் இருந்து அன்னியமாகி நுகர்வு உலகில் சிக்கிவிடும் குடும்பப் பெண்ணால், நடைமுறை வாழ்வில் திருப்தியை காணமுடிவதில்லை. அழகும், கவர்ச்சியும், ஆடம்பரமுமே அனைத்துமாகி விட, பொருட்களுடனான வாழ்வில் வாழ்வை திருப்திப்படுத்த அவளாலேயே முடியாது. இதன் விளைவு என்ன?

ஆணாதிக்க அமைப்பு உருவாக்கிய வட்டத்துக்குள் இயங்க முனையும் பெண், அதில் இருந்து விடுபடுவதற்கு பதில், அதை தீவிரமான தனது கடமையாகவே வலிந்து தேர்ந்தெடுக்கின்றாள். சமூக மாற்றங்களை உட்கிரகிக்க மறுக்கும் போது ஏற்படும் வலி, சொந்த வாழ்வியலையே துன்பமாக்குகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE