Language Selection

பி.இரயாகரன் - சமர்

தமிழ் மக்களின் முதன்மை எதிரியான சிங்களப் பேரினவாதம், தமிழ் இனத்தின் இருப்புக்கே வேட்டுவைக்கின்றது. அதை வெறுமனே புலிப் பயங்கரவாதமாக காட்டுகின்றது. தமிழ் இனத்துக்கு எந்த அரசியல் உரிமையும்

தமிழ் சமூகத்தினை நாடி பிடித்து பார்க்கும் அளவுக்கு, இதன் விளைவு வக்கிரமாகவே வெளிப்படுகின்றது. ஒரு மனிதனை கோடாலி கொண்டு கொத்தவும், வாள் கொண்டு கண்ட துண்டமாக வெட்டவும் முடியும் என்பதை, தமிழ் சமூகம் மீண்டும் மீண்டும் தனது சொந்த வாழ்வியலில் நிறுவி வருகின்றது.

புலியொழிப்பை வைக்கும் புலியெதிர்ப்பு புளுக்க வைக்கும் கட்டுரை ஒன்றை தேனீ வெளியிட்டுள்ளது. 'புலம் பெயர் நாடுகளில் மதில்மேல் குந்தியிருக்கும் ஆசாடபூதி பூனைகள்.

புலியொழிப்பையே அரசியலாக செய்யும் புலியெதிர்ப்புவாதிகளின் அரசியல் துரோகத்தை நாம் தோலுரிக்கும் போது, அதை மொழி வக்கிரம் என்று முதுக்கு பின்னால் அவதூறு செய்யமுனைகின்றனர். புலியெதிர்ப்பை தவிர வேறு எதையும் பேசத்தெரியாத

அற்பவாதிகளோ கோட்பாடின்றி, அரசியல் சதிகளுக்கு பின்னால், சதா ஓடி ஒழித்து விலாங்குகளாக வாழ்பவர்கள். இதையே அரசியலாக, நடைமுறையாக காவடி எடுப்பவர்கள். இந்த அற்பவாதக் கும்பலோ, புலியெதிர்ப்பின் பின் புலியொழிப்பை முன்வைத்தபடி,

இந்த விடையில் எமது நிலை என்பது தெளிவானதும், வெளிப்படையானதுமாகும். தமிழ் மக்களுக்கு வெளியில், எமக்கு என்று தனியான சொந்த நிலைப்பாடு எதுவும் கிடையாது. ஆனால் இதை புரியாத மாதிரி குழப்புவதில் தான், பிற்போக்கு சக்திகளின் சொந்த வர்க்க அரசியலே அடங்கிக் கிடக்கின்றது.

அரசியல் ஈடுபடுபவர்கள் அனைவருமே, மக்கள் என்ற பதத்தை பொதுவாக பயன்படுத்துகின்றனர். இதே போல் சமூகம் சார்ந்து தன்னார்வமாக செயல்படுபவர்களும் கூட, தாமும் மக்களுக்காக செயல்படுவதாக கூறுகின்றனர்.

புலிகளின் தனிமனித பயங்கரவாதம் உருவாக்கிய இராணுவ வாதங்கள் சொந்த நெருக்கடியில் சிக்கி திணறுகின்றது. இப்படி மக்களின் வாழ்வியலில் இருந்து அன்னியமாகிய புலியிசம், தொடர்ச்சியாகவே தோற்கின்றது. இதன் விளைவு பேரினவாதத்தின் வெற்றியாகின்றது.

ஆதிக்கம் பெற்று நிற்கும் எதிர்புரட்சிகர சக்திகள் அனைத்தும், இதற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வைக் காட்டமுனைகின்றனர். இப்படி கடந்தகால வரலாறு முழுக்க, இதற்குள்ளாகவே ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று போட்டனர்.

இரண்டு பத்து வருடமாக தோற்றுக் கொண்டே இருக்கும் இரண்டு பிரதான வழிகள், இலங்கையில் பல பத்தாயிரம் மக்களை கொன்று போட்டுள்ளது. இன்னமும் கொன்று போடுகின்றது. இப்படி மனித அவலங்களோ எல்லையற்ற துயரமாகி, அவை பரிணாமித்து நிற்கின்றது.

கிழக்கை பேரினவாதம் கைப்பற்றியது பற்றிய, புலி எதிர்ப்பு (ஓழிப்புக்) கும்பலின் அரசியல் நிலைப்பாடு இதுவாகவேயுள்ளது. குடும்பிமலை யத்தமும் பேரினவாதக் கூச்சலும் ஒன்றாகி, அதுவே கிழக்கு மக்களின் வெற்றிப் பிரகடனமாக, பேரினவாத பாசிசப் பேய்கள் அறிவிக்க, புலியெதிர்ப்புக் கும்பலோ புலிப் பாசிசத்தை ஒழித்ததாக கூறிக் கொண்டாடுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE