Language Selection

பி.இரயாகரன் - சமர்

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தான் நாம் போராடுகின்றோம் என்று கூறிக்கொண்டு, அவர்களுக்கு எதிராக அரசியலில் சித்துவிளையாட்டு காட்டுகின்றவர்கள் முதன்மையான உடனடியான எதிரிகள்.

ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்? இதுவல்ல என்று பலமாக நம்பும் நாம், இப்படித் தான், இதற்குள் தான், நாம் எம்மையறிமால் இதை நியாயப்படுத்தியும் வாழ்கின்றோம். இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியம். எம்மிடம் எஞ்சியிருந்த மனித கலாச்சாரங்களை எல்லாம் நாம் இழந்து வருகின்றோம்.

இதற்குள் தான் இந்த மாநாடு, சுற்றிச்சுற்றி வலம்வருகின்றது. இப்படி இது, தலித் மக்கள் பற்றிய மாநாடு அல்ல. தலித்தின் எதிரிகள் யார் என்று பட்டியலிடவும், அதைப் பிரகடனம் செய்வதற்காகவுமல்ல, இந்த மாநாடு. மாநாட்டு ஏற்பட்டாளர்களில் பெரும்பான்மையானோர் தீவிர வலதுசாரிகள்.

மனித இழிவுகளையே அது அடிப்படையாக கொண்டது. மனிதன் மேல் கொடூரமான, இழிவான, வக்கிரமான ஒடுக்குமுறைகளைச் செய்யும் கோட்பாட்டாலானது. இந்த சமூக அமைப்பில், இப்படிப்பட்ட ஒன்று தான் பார்ப்பனியமும். இதன் பிரதிநிதிகள் தான், இந்த பார்ப்பனமணிகள்.

அரசும் சரி, புலியும் சரி, யார் அதிக மக்களைக் கொல்வது என்பதிலும் கூட போட்டிபோடுகின்றனர். மனித அறங்களை எல்லாம் கடந்து, நிர்வாணமாகவே நிற்கின்றனர். பழிக்குபழி, இரத்தத்துக்கு இரத்தம், கொலைக்கு கொலை என்று, அரச பயங்கரவாதமும் புலிப் பயங்கரவாதமும் போட்டி போடுகின்றது.

பார்ப்பனியம் என்பது அறிவால் நிலைநாட்டப்பட்டதல்ல. சூழ்ச்சியால், சதியால், வன்முறை கொண்ட அதிகாரத்தால் தான், சமூகத்தை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட பார்ப்பனியம் தான், தமிழ்மணத்தில் பல வேடங்களில், பல பார்ப்பனிய இடுகைகளைப் போட்டனர்.

இதையெல்லாம் யார் கூறுகின்றனர். இந்திய இலங்கை கூலிக் குழுக்களாக உள்ளவர்கள் இதைக் கூறுகின்றனர். இதுதானாம் மக்களின் விடுதலைக்கான ஒரு பாதை என்கின்றனர். மக்களுக்கு எதிரான தமது துரோகத்தை பறைசாற்றும் இவர்கள், 'யதார்த்தமாக சிந்திப்பவன் என்ற வகையில் தமிழ் மக்களின் விடியலுக்கு" இந்த 'எலும்புத்துண்டுகளைத்தனிலும் கொடுக்கமுடியு"ம் என்கின்றனர்,

என்னை யார் என்று தெரிந்து கொண்டு, அதன் ஊடாக என் மீது தனிநபர் தாக்குதலை நடத்துகின்றனர். இதை மூடிமறைக்கவே, நான் தனிமனித தாக்குதல் நடத்துவதாக கோயபல்ஸ் பாணியல் கூறுவதே, புலியல்லாதவர்களின் அரசியல் எதிர்வினையாகின்றது.

கிரிமினல் ஊடகவியல் என்பது, நிலவும் அரசியல் சூழலையும், அதன் எதார்த்தத்தையும் மறுப்பதாகும். தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவே 'ஒரு ஊடகவியலாளன் ஒரு தகவலை சேகரிக்கும் போது, யார்? யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? எப்போது?

சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் கிரிமினல்கள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் கிரிமினல்கள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.

இப்படி ஏதோ தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதாக நினைப்பு. இதை பொறுக்கித்தின்னும் ஒரு கூட்டம் வாலாட்டிக் கொண்டு நக்க அலைகின்றது. பேரினவாதமோ கொழுப்பெடுத்து நிற்கின்றது. பயங்கரவாதம் வேறு, தமிழ் மக்கள் வேறு என்று கூறி, நெட்டிமுறித்து திமிரெடுக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE