Language Selection

பி.இரயாகரன் - சமர்

மூலதனத்தை திரட்ட விசேட நிலச்சட்டம் 1810 லும், 1812லும் நிலம்பற்றிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டப்படி ஐரோப்பியர் 4000 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கவும், ஐந்து வருடத்துக்கு வரியேதும் கட்டத் தேவையில்லை என்ற விசேட சலுகை வழங்கப்பட்டது.

மலையக மக்களின் கடும் உழைப்பே, இலங்கையின் அனைத்து இனங்களினதும் சமூக வாழ்வை நலன்களை உயர்த்தின. மலையக மக்கள் பிழியப்பட்டு கிடைத்ததை உறிஞ்சி வாழ்ந்த மற்றைய இனங்கள், அந்த மக்களை தொடர்ச்சியாக கேவலப்படுத்தவும் ஒடுக்கவும் பின்நிற்கவில்லை. மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வையும் பற்றி புரிந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாத தேசியம், அந்த மக்களை இலங்கையின் ஒரு தேசிய இன மக்களாக அங்கீகரிக்காத தேசியம், சிறுபான்மை இனமான தேசிய இறைமைக்காக போராட தேசியம் அடிப்படையிலேயே பிற்போக்கானது.

நிலச் சூறையாடலில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், பொருளாதார அடிப்படைகளையும் பரந்த தளத்தில் சிங்கள இனவாதிகள் அழித்தொழித்துள்ளனர். இதைத் தமிழ் தேசியம் இன்று வரை எதிர்த்துப் போராடவில்லை. குறுந் தேசியமல்லாத தேசிய போராட்டம் இந்த நிலம் சார்ந்தும், அந்த மக்களின் உழைப்பு சார்ந்தும் போராடியிருக்க வேண்டும். பிரதானமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அடிப்படையாக கொண்டு யாழ் தேசியமாகவே குறுந் தேசியம் வளர்ச்சி பெற்றது. சூறையாடப்பட்ட நிலத்தில் வாழ்ந்த மக்களையிட்டும், அவர்களின் அடிப்படை பொருளாதார வளங்கள் சார்ந்தும் தேசியத்தை முன்னெடுக்கத் தவறி, குறுந் தேசியத்தை தனது அரசியலாக்கியது.

 

இலங்கையில் மக்கள் தொகையில் சிங்களவர் 72 சதவீதமாகவும், இலங்கைத் தமிழர் 11.2 சதவீதமாகவும், மலையகத் தமிழர் 9.3 சதவீதமாகவும், முஸ்லீம்கள் 7.1 சதவீதமாகவும், ஏனையோர் 0.5 சதவீதமாகவும் இருந்த போதும், உயர் வர்க்க தமிழர்களின் அரசு வேலை வாய்ப்புகள் மொத்த மக்கள் தொகையில் ஆராயும் போது ஒரு சமூகத்தின் அதிகாரத்தை தெளிவாக்குகின்றது. இதைத் தனியாக ஆராய்வோம்.

இது எம்மை நோக்கி எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வியும் கூட. வடக்கு – கிழக்கை உள்ளடக்கிய தமிழ் தேசியம், தனது சுயநிர்ணயத்துக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்த தவறியதால், அது சிதைந்து சீரழிந்து விட்டது. இதை வெறும் புலிகள் மட்டுமல்ல, ஆயுதம் ஏந்திய அனைத்துப் பெரிய குழுக்களும், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி போராடவில்லை. பின்னால் இதை முன்னிறுத்தி புலிக்கு எதிராக அவாகள் போராடவில்லை. நான் நாம் மட்டும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தினோம்.

உலகில் புலிகள் மட்டும் தான் இதை செய்யும் அளவுக்கு, மனவக்கிரத்தைக் கொண்டவர்கள். சொந்த மக்களையே யுத்த முனையில் நிறுத்தி, அவர்களை தமக்காக சண்டை செய் என்று நிர்ப்பந்திக்கின்ற புலி அரசியல் தான், புலிகள் சொல்லும் மக்கள் யுத்தம். மறுபக்கத்தில் பேரினவாதத்தின் பொதுவான அழித்தொழிப்பில் மக்களைக் குறிப்பான இலக்காக்கி, அதை வைத்துப் பிரச்சாரம் செய்ய முனையும் பிரச்சார யுத்தம்.

அனைத்து சுயாதீனத்தையும் இழந்துவிட்ட தமிழ் இனம், புலியினதும் அரசினதும் கோரப்பற்களுக்கு இடையில் சிக்கி அழிகின்றது. அகதியானலும் சரி, அமைதியின் பெயரில் அரசு புலி என்று யார் ஆண்டாலும் சரி, தமிழ் மக்கள் மலடாக்கப்பட்டு ஊமையாக்கப்பட்டுள்ளனர். எங்கும் எல்லையற்ற மனித அவலம்.

 

மனிதம் சந்திக்கின்ற சொந்த துயரத்தை யாரும் பேச முடியாது. தேசியத்தின் பெயரில், பயங்கரவாதத்தின் பெயரில், எல்லாம் அடக்கி ஒடுக்கப்படுகின்றது.

மக்கள் தான் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்ற உண்மையை, இதுவரை அரசியலில் ஈடுபடுகின்ற எவரும் ஏற்றுக் கொண்டது கிடையாது. அரசியலை மக்கள் ஊடாக பார்க்கும் எமது நிலைக்கும், மற்றவர்களின் மக்கள் விரோத நிலைக்கும் இடையிலான அரசியல் வேறுபாடு, அரசியல் சாரமாக உள்ளது. நாங்கள் மட்டும், மக்கள் தான் புலிகளைத் தோற்கடிக்கின்றனர் என்பதை தனித்துச் சொல்லுகின்றோம். புலிகளும் சரி, புலியெதிர்ப்பும் சரி, மக்கள் புலிகளை தோற்கடிக்கின்றனர் என்பதை நம்ப முடிவதில்லை. உண்மையில் இங்கு புலிகள் மட்டும் தோற்கடிக்கப்படுவதில்லை, புலியெதிர்ப்பும் தோற்கடிக்கப்படுகின்றது.

ஏகாதிபத்திய யுத்தங்கள் வெளிப்படையாகவே வெடித்துக் கிளம்புகின்றது. அன்று யூக்கோசிலோவோக்கியாவை அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியம் உடைத்து அதைச் சிதைத்த போது, அது வெளிப்படையற்ற ஏகாதிபத்திய பனிப்போராகத் தான் அம்பலமாகாது அரங்கேறியது.

சரவணன் தாக்கப்பட்ட செய்தி மறைக்கப்பட்டு, அவை ஊமையாக்கப்பட்ட பின்னணியில் தான் அம்பலமானது. இது அம்பலமான போது, இதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற கூட்டம், உடனடியாக கண்டனம் தெரிவித்து புலம்புகின்றது. தமது மக்கள் விரோத வன்முறை அரசியல் இருப்பையும், அடையாளத்தையும் காட்ட, அரசியலற்ற வெற்றுக் கண்டனங்களால் புலம்புகின்றனர். இவை எல்லாம் சரவணனை தாக்கியவனின் அதே அரசியல் எல்லைக்குள், புளுத்துத் தான் வெளிப்படுகின்றது. இவை கூட சடங்கு, சம்பிரதாயமாக, இது இவர்களின் அரசியல் நடைமுறையாகி விடுகின்றது. இப்படி கண்டனங்கள் கூட, அரசியலற்று வெற்று வேட்டுத்தனமாகின்றது.

 

உழைத்து வாழும் மக்களுக்கு எதிராக இயங்கிய ஒரு துரோகியன் மரணமும், எகாதிபத்திய அஞ்சலிகளும்.

வெளிவரவுள்ள நூலில் இருந்து


ருசிய எழுத்தாளர் அலெக்சாண்டர் சோல்ஜெனித்சின். அவரின் நூலான ~~தி குலாக் ஆர்சிபிலாகோ|| மூலம் 1960 களின் இறுதியில் ஸ்டாலின் எதிர்ப்பு கட்டமைக்கப்பட்டது.  இவர் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்து பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க முனைந்தமையால் 1946 முதல் எட்டு வருடம் சிறையில் இருந்தவர். ஸ்டாலின் மரணத்துடன் நடந்த முதலாளித்துவ மீட்சியில் தப்பி ~~ஜனநாயகவாதி||யானவர். இவர் இராண்டம் உலக யுத்தத்தில் சோவியத் நாசிகளுடன் சமரசம் செய்து சரணடைந்து இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். அத்துடன் நாசி ஆதாரவு அனுதபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், துரோகி என்று கண்டிக்கப்பட்டு தண்டிக்ப்பட்டவர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE