Language Selection

பி.இரயாகரன் - சமர்

தமிழினத்துகாக உணர்வுபூர்வமாக குரல்கொடுப்போர் கிடையாது. புலிக்காக தமிழினத்ததை உச்சரிக்கின்றவர்கள், தமிழினத்தின் மேல் அழிவுகளை ஏற்படுத்தி அதைக் காட்டியே அரசியல் செய்கின்றனர். இந்த புலியின் ஈனச் செயலைக்காட்டியே, பேரினவாதம் தமிழ் மக்களை மீட்கப்போவதாக கூறி குண்டுகளை தமிழ் மக்கள் மேல் சரமாரியாக பொழிகின்றது.

இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில்  ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான். 

மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம்  மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.

குமுதம் சஞ்சிகைக்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன் வழங்கிய பேட்டி, தமிழ் மக்களையே கேனப்பயலாக்குகின்றது. விடுதலைப்புலிகள் தவறுகளை எல்லாம் உணர்ந்து திருந்தி விட்டதாக கூறுகின்ற, பிழைப்புத்தனத்தை அம்மணமாக்கிவிட்டது. பலர் புலிகள் திருந்திவிட்டதாக கூறி, தமிழ் மக்களாகிய நாம் எல்லோரும், முஸ்லீம் மக்கள் உள்ளிட புலியின் பின் அணிதிரள்வதுதான் பாக்கி என்கின்றனர். 

பலருக்கும் புரியாத புதிர். அங்கு ஏதாவது அற்புதம் நடக்கும் என்று நம்பும் எல்லையில் கனவுகள்;. ஆயுதங்கள் முதல் விமானம் வரை கொண்டுள்ள புலிகள், மூச்சு விடமுடியாத பாசிச நிர்வாகத்தை அச்சாகக் கொண்டுள்ள புலிகள், இன்று என்ன செய்கின்றனர் எனத் தெரியாது பலர் புலம்புகின்றனர். இந்த எல்லையில் ஆய்வுகள், அறிக்கைகள் வேறு. 

இலங்கை கொந்தளிப்பான யுத்த சூழலுக்குள் சிக்கி பாசிசமாக சிதைகின்ற போதும், உலகமயமாதல் அதனூடாகத்தான் அமுலுக்கு வருகின்றது. பயங்கரவாதம் என்ற போர்வையில், ஏகாதிபத்திய அனுசரணையுடன் இலங்கையில் யுத்தம் திணிக்கப்படுகின்றது.  இதை பேரினவாதம் புலி ஒழிப்புக் கோசத்தின் கீழ், தமிழின அழிப்பாக நடத்துகின்றது. இதன் மூலம் இலங்கை தழுவிய பாசிசத்தை நிறுவிவருகின்றது.

தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனை தீர்க்கப்படாமலேயே, தமிழீழம் என்ற கோரிக்கை மரணித்துப் போனது. உண்மையில் இந்தக் கோரிக்கை இன்று மண்ணில் வாழ்கின்ற மக்கள் மனங்களில், வெறுப்புக்குரிய ஒன்றாக, மனித அவலத்தை தந்த ஒன்றாக மாறிவிட்டது. இது மக்களை அரவணைத்துச் செல்லவில்லை. நன்மைக்குப் பதில் தீமையையே விதைத்தது.

இந்தியாதான் இன்று இலங்கையில் யுத்தம் செய்கின்றது. புலிகளை அழிக்கின்றது. இதனால்தான் புலிகள் தோற்கின்றனர். இப்படி இன்று நிலைமையை சிலர் ஆராய்கின்றனர். இந்த அடிப்படையில் போராட்டங்கள், கோசங்கள் முதல், தம் சொந்த தவறுகளை மூடிமறைக்கும் கைங்கரியங்கள்.

இது ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சுரண்டி தின்னும் வர்க்கமும், அதையண்டிப் பிழைக்கும் ஊடகவியலுக்கும் இடையில் மோதல். பாசிசம் மூலம் நாட்டை சுரண்ட முடியும் என்ற மகிந்தாவின் சிந்தனைக்கும், இதில்லாமலே சுரண்ட முடியும் என்ற எதிர்க்கட்சி ஊடகவியலுக்கும் மோதல்.

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு  செரிக்கிறவர்கள் இவர்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE