Language Selection

பி.இரயாகரன் - சமர்

புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் சோசலிச தமிழீழத்தையே உருவாக்க வேண்டும் என்பது எனது கருத்து. நாம் சிங்கள மக்களுடன் இணைந்து வாழமுடியாது என்று தான் தமிழீழம் என்று முடிவெடுத்தோம். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை.

ரஸ்சியத் தேர்தல் சமீபத்தில் (12-12-1993) நடைபெற்றது. கம்யூனிஸ்டுக்கள் அடியோடு ஒழிந்துபோவார்கள். மக்கள் ஜெல்சினைத் தான் தெரிவு செய்வார்கள். மீண்டும் ஜெல்சீன்னே பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கனவு கண்ட மேற்குலக அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பாசிச ஆதரவாளர்கள் தவிர யாவரும் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார்கள்.

இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீரை கட்டாயப்படுத்தி இணைத்த இந்திய அரசு இன்று இராணுவ அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளனர். 1947 இல் பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் செல்வாக்குப் பெற்ற பதான்ஸ் என்ற இனக்குழு காஸ்மீர் மீது படையெடுத்தனர். அத்துடன் உள்நாட்டுக்கிளர்ச்சியிலும் மக்கள் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சேக் அப்துல்லாவும் மகாராஜா ஒரிசிங்கும் நேருவுடன் ஒப்பந்தம் செய்து நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைத்தனர்.

ஒரு பெண்ணை மானபங்கப்படுத்துவதோ அல்லது கற்பழிப்பதோ அல்லது இம்சிப்பதோ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகாது, அதனுடன் இப்படிச் செய்தவர்களை தண்டிக்க மட்டுமே சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு நீதி மன்றத்தில் திருவாய் மலர்ந்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மைக்கல் ஜாக்சன் ஒரு தன்னினச் சேர்க்கையாளன். மக்களின் போராட்ட உணர்வுகளை திசைதிருப்பும் வகையில் சீரழிந்த இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் இவன் பல சிறுவர்களின் வாழ்க்கையையும் நாசப்படுத்தியுள்ளான். அமெரிக்காவில் தன்னினச்சேர்க்கையையும் கருக்கொலையையும் சட்டபூர்வமாக அங்கீகரித்த கிளிங்டனுடன் கைகுலுக்கிக் கொள்ளும் மைக்கல் ஜாக்சன் ஒரு பணக்கார குற்றவாளியே.

நாம் சமர் 7 இல் ஆசிரியர் தலையங்கத்திலும் அரபாத்தின் துரோகத்தனத்தை சுட்டிக்காட்டியிருந்தோம். இரண்டு தலைமுறையாக பலஸ்தீன மக்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் தமது மண்ணுக்காக நடத்திய போராட்டத்தை அரபாத் போன்ற சுயநலவாதிகள் காட்டிக் கொடுத்துள்ளனர்.

சரிநிகர் 109 இல் ( நவம்பர் 07 நவ 20 ) புதியஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த சிவசேகரம் மூன்றாம் உலகில் சோவியத் தலையீட்டையொட்டி கூறுவதைப் பார்ப்போம்.

சரிநிகருக்குள் மார்க்சிய விரோதிகள் எதை எப்படி திணிக்க முனைகின்றனர் எனப் பார்ப்போம்:- சரிநிகர் 124 இல் திட்டமிட்ட மார்க்சிய விரோத கோட்பாட்டை வெளிப்படுத்தும் மூன்று செய்திக் கட்டுரைகள் வெளிவந்திருந்தன. தலித்தியக் குறிப்புக்கள், பின் நவீனத்துவமும் பின் காலனித்துவமும் சில புதிய புத்தகங்கள் என்ற வெவேறு தலைப்புகளில் வெளியாகிய செய்திகள் மட்டுமின்றி அண்மைக்காலமாக சரிநிகரில் அதிகளவு மார்க்சிய விரோதக்கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

புரட்சிவரலாற்றில் பங்கெடுத்த தலைமைகள் செய்த சாதனைக்கு ஈடாக தவறுகளையும் செய்யத்தவறியதில்லை என்பது நாம் அறிந்த, படித்த, தரிசித்த வரலாறுகளாகும். இந்த வரிசையில் பாலஸ்தீன மக்களின் தேசமீட்புப்போரில் ஏற்பட்டுள்ள, திருப்புமுனை என வர்ணிக்கப்படும் தேக்க நிலையிலிருந்து தரிசிக்கும் இவ்வேளையில் சமர் தனது 9வது இதழை வெளியிடுகின்றது.

சமர் ஆசிரியர் குழுவினருக்கு!  தோழமையுடன் எழுதிக்கொள்வது. உங்கள் (திகதியிடப்படாத) கடிதமும், அத்துடன் இணைந்த தேசிய விடுதலைப் போராட்டமும் தேசிய சக்திகளும் எனும் (ஏ4 அளவுப் பேப்பரில்)18 பக்கக் கட்டுரை ஒன்றும் கிடைக்கப் பெற்றோம். மேற்படி உங்களது கட்டுரையில் விவாதத்துக்குரிய அல்லது கருத்தாடலுக்குரிய பண்புகள் மீறப்பட்டுளளமையினால் எமது பத்திரிகையில் பிரசுரிப்பதில்லை என்ற ஒருமித்த முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

மனிதம் இதழில் வெளிவந்த எனது கட்டுரை தொடர்பாக சில கேள்விகள் எழுப்பியிருந்தீர்கள். நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்தில் இது பற்றி சிறு விளக்கம் அளித்திருந்தேன். அது போதுமானதாக அமையவில்லையென இம்மடல் மூலம் உணர்கின்றேன்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE