Language Selection

பி.இரயாகரன் - சமர்

எங்கும் பொம்மலாட்டம் ஆடிகாட்டும் சீரழிவுவாதியான சுசீந்திரன் 'இனஅழிப்பு நடக்கிறதாக கருதறாங்க. ஆனால் என் பார்வையில் அங்கு இன அழிப்பு நடைபெறவில்லை" என்கின்றான்.  சரி அங்கு நடந்தது என்ன? அரசு சொல்வது போல் புலி அழிப்பா!?

பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும்.

புலித்தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார், இல்லையில்லை அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி, புலித் தலைவர்களை சரணடைய வைத்துக்கொன்ற தமது சொந்தத் துரோகத்தை மூடிமறைகின்றனர்.

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

எம் மக்களின் பொது எதிரிக்கு எதிராக மரணித்துப் போன பல்வேறு வர்க்கங்களுக்கும், சமூகங்களுக்குமான இந்த அஞ்சலி அரசியல் ரீதியானவை. எம் மக்களின் பொது எதிரி, தன்னை தனிமைப்படுத்தி பலம்பெற்று நிற்கின்ற இன்றையநிலை. மக்களின் இரண்டாம் மூன்றாம் எதிரிகள் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து மரணிக்கும் இன்றைய நிலை. இந்த நிலையில் பிரதான எதிரிக்கு எதிராக மரணித்த அனைவருக்கும், நாம் அஞ்சலியை செலுத்தக் கோருகின்றோம்.

திட்டமிட்ட சதி மூலம் புலித்தலைமையும், அவர்கள் குடும்பமும் முற்றாக சரணடைய வைத்தே அழிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் எஞ்சி இருந்ததாக நம்பப்படும் 2000 போராளிகளுக்கு கூட, இதுதான் கதி. இந்தச் சதி மூலமான சரணடைவின் பின், சித்திரவதைக் கூடங்களில் இன்னமும் சில தலைவர்கள் சிக்கி மரணிக்கின்றனர் என்பது வேதனையானது.

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.

சரியான தலைமையால் அதை செய்திருக்க முடியும். தவறுகளை உடனுக்குடன் திருத்தக் கூடிய, தன் சுயவிமர்சனத்தைச் செய்யக் கூடிய எந்த தலைமையாலும் அதைச் செய்திருக்க முடியும். இது அரசியல் பண்பும், அரசியல் அடிப்படையும் இல்லாமையால் தான், புலிகள் தமது புதைகுழிக்குள் நின்று போரிட்டனர்.

அன்று 'மகாத்மா"காந்தி பகத்சிங்கை கொல்ல வெள்ளையனுக்கு நாள் நேரம் குறித்துக் கொடு;த்தான். இப்படித்தான் அவர்களை தூக்கில் ஏற்றுவித்தான் அந்தத் துரோகி காந்தி. அதே காந்தி வழிவந்த இந்தியா, இன்று நேரம் குறித்து கொடுக்க பேரினவாதப் பிசாசுகள் புலித்தலைவர்கள் மேலான படுகொலையை அரங்கேற்றியுள்ளது.

இன்று, இந்த மணி, இந்த நிமிடம், இந்தக் கணம், ஒரு பாரிய மனித அவலத்தின் மேல், ஒரு அழிப்பு யுத்தம் நடக்கின்றது. இது ஒரு இனத்தின் மேலாக நடக்கின்றது. ஆயிரம் ஆயிரம் மக்களை பலியிடுதல் இன்றி, இந்த அழித்தொழிப்பு நடக்கவில்லை. மக்கள் அனைவரும் வெளியேறி விட்டதாகக் கூறும் ஒரு பொய்ப்  பிரச்சாரம் மூலம் இந்த இனவழிப்பு உச்சத்தில் அரங்கேறுகின்றது.

புலிகளை அழிக்கவும், இதன் தலைமையை கைது செய்யவும் என்ற பெயரில், ஒரு இனவழிப்பே அரங்கேறியுள்ளது. வெடிகுண்டுகள் மாரியென பொழிய, அதற்குள் மக்கள் சிக்கி மரணிக்கின்றனர்.    

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE