Language Selection

பி.இரயாகரன் - சமர்

இன்று தமிழ்மக்கள் அறிந்திருக்கவும், அதில் நாம் பல விடையத்தை கற்றுக்கொள்ளவும், இரண்டு இணையங்கள் உள்ளது. இன்று தமிழ்மக்கள் தம்மைத்தாம் அறிந்து கொள்ள வேண்டிய காலம். சகல அறநெறிகளையும் இழந்து நிற்கின்றது எமது சமூகம். சமூகம் தன் சொந்த அறியாமையில் இருந்து மீள, கற்றல் மிக முதன்மையானது.

வன்னிமுகாமில் உள்ள இளம் பெண் ஒருவருடனான உரையாடலின் போது, அள்ளிக் கொட்டிய குமுறல் தான் "நாசமாகப் போவாங்கள், அறுவாங்கள்" என்று திட்ட வைத்தது. அடக்கி ஒடுங்கிக் கிடக்கும் கோபங்கள், போராட்டங்கள், இப்படித்தான் குமுறி வெடித்தெழுகின்றது. சமாதான காலத்தில் இதே பெண், தமிழீழம் மிக விரைவில் மலரும் என்றவர். அப்படியா என்ற போது, எம்மை எள்ளி நகையாடிக் கதைத்தவர்.

இது வன்னி நாசிய முகாமில் நடக்கும் புதிய வியாபாரம். சிங்கள பேரினவாத போர்க் குற்றவாளிகள், தாங்கள் நடத்திய போர்க் குற்றத்தை மறைக்க பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையே சிறை வைத்துள்ளனர். அவர்களுடன் வெளியார் உரையாடத் தடைவிதித்துள்ளனர்.

தேசியத்தில் வர்க்கமில்லை என்று, தமிழ் தேசியத்தை அழித்தவர்கள், இப்படி சன்னி கண்டு புலம்புகின்றனர். வேடிக்கையான குதர்க்கம். தமிழ்மக்களை தமிழ்தேசியத்தின் பெயரில் அழித்தவர்கள், தமது புலித் தமிழ் தேசியத்தை வர்க்கக் கண்ணோட்டம் அழிக்கப் போவதாக குமுறுகின்றனர். வேல் தர்மா என்ற இணைய பதிவாளர் "ஈழப் பிரச்சனையும் வர்க்கக் கண்ணோட்டமும்" என்ற தலைப்பில், தமிழ்மக்களை அழித்த புலித்தேசியத்தைப் பாதுகாக்க பொங்கி எழுகின்றார்.

போராட்டத்துக்கு விரோதமான உனது செயல்கள் தான், தமிழருக்கு எதிரான ஒடுக்கப்பட்ட சிங்களமக்களின் எதிர்வினையாகியது. நீ அரசுக்கு எதிராக மட்டும் போராடி, சிங்களமக்களின் அவலங்களுக்கு நீ குரல் கொடுத்து இருந்தால், உன்னை அவர்கள் போற்றியிருப்பார்கள். உன்னை அவர்கள், தங்கள் எதிரியாக பார்த்திருக்கமாட்டார்கள்.

இறந்த ஒருவரை இறக்கவில்லை என்று கூறுவது, ஒரு சமூகம் தன் பகுத்தறிவைக் கூட  இழந்து நிற்கின்றது என்பதே அர்த்தமாகும். இப்படி இறக்கவில்லை என்பது ஆகப் பெரும்பான்மையிடம் உளவியல் சார்ந்த நோயாக இருப்பதைக் நாம் காணமுடியும். சிறுபான்மையிடம் இது பிழைப்பு சார்ந்தது. பினாமி சொத்துச் சார்ந்த அரசியல் மோசடி.

அவன் உன்னைப்பற்றி என்ன நினைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனைப்பற்றி என்ன நினைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சேர்ந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

மக்களுக்கு எதிரான கடந்தகால புலிப் பாசிசத்தை, சுயவிமர்சனம் விமர்சனம் செய்யாத பாசிசத்துக்கான புதுப் புலுடாப் பிரகடனம். தமிழினத்தை தொடர்ந்து தமக்குள் அடிமையாக வைத்திருக்க, வலது பாசிட்டுகள் புலுடாப் பிரகடனம்.  

இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்வதன் மூலம் தான், அனைத்து பிரிவு மக்களும் தத்தம் உரிமைகளைப் பெறமுடியும். இது மட்டும்தான், மக்கள் தம் உரிமைகளைப் பெறவுள்ள ஒரேயொரு மாற்றுவழி. தனித்தனியாக பிரிந்து நின்றும், முரண்பட்டும் இதைப் பெறமுடியாது.

மூன்று பத்தாண்டுகளாக நிலவிய ஆயுதப் போராட்டம், இன்று ஒரு தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு அரசியல் அடிப்படையாக இருந்த இன முரண்பாடு, அரசியல் ரீதியாக இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை. மாறாக மிக மோசமான ஒரு இனவழிப்பு, பாசிச வடிவத்தை எட்டியுள்ளது. இதை இன்று எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின்றி, தமிழினம் அனாதையாகியுள்ளனர்.

மக்களுக்காக நிற்க முடியாதவர்கள், அனைத்தையும் புலி அல்லது அரசுக்கூடாக பார்த்தவர்கள், இன்று இதற்கூடாகவே சிந்தித்துக் காட்ட முனைகின்றனர். பாரிய குற்றங்களைக் கூட, எதிர்த்தரப்பின் செயலாக சித்தரிக்கின்ற திருகுதாளங்களும், அரசியல் பித்தலாட்ட முயற்சிகளும். இலங்கையில் நடந்தவற்றுக்கு எதிராக ஒரு சுயாதீனமாக விசாரணையைக் கூட கோர மறுக்கின்ற தர்க்கங்கள், புரட்டல்கள். கடந்தவை எவையும் போர் குற்றங்களல்ல என்று, காலம், நேரம், இடம், சூழலைக் காட்டி அரசியல் பித்தலாட்டங்கள். 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE