Language Selection

பி.இரயாகரன் - சமர்

யமுனா ராஜேந்திரன் என்ன கூறுகின்றார். புலி தனக்குள் சாதி பார்க்கவில்லை என்றால், அது சாதிய சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார். புலி தனக்குள் பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றால், அது பிரதேசவாதத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.  புலிகள் தனக்குள் ஆணாதிக்கத்தை கடைப்பிடிக்கவில்லை என்றால், ஆணாதிக்க சமூகத்தை பாதுகாத்த இயக்கமல்ல என்கின்றார்.

வெளிநாட்டவர்களுக்கு எதிராக கோஷம் இடும் நாசிகள், வெளி நாட்டவர்களாலேயே இங்கு பிரச்சனைகள் எனக் கோஷம் இடுகின்றனர். இங்கு வேலையில்லாமைக்குக் காரணம் வெளிநாட்டவரே என படுபுளுகு விடுகின்றனர்.

பெண்களுக்கும் – ஆண்களுக்கும் உள்ள சம்பள வேறுபாடு


                                                 பெண்                         ஆண்                             அதிகரிப்பு
பாதுகாப்பு துறை              1,96,2000 F             2,69,000  F                        +37 %


தொ.நுட்பவியல்                  1,15,800 F              1,37,300 F                        +18 %


அலுவலகர்                               86,800 F                  96,600 F                       +11%


தொழிலாளர்                            72,100 F                  93,600 F                       +29 %


இந் வகையில் ஆணுக்கும் பெண்ணிற்க்கும் ஒரே வேலையில் வேறுபாடான சம்பளம் வழங்கப்படுகின்றன. இதை விடவும் ஒரு பெண்ணிக்கும் ஆணுக்கும் ஒரு நாள் எவ்வாறு பங்கிடப்படுகின்றது எனப்பார்ப்போம்.

 

1வேலை

2.வீடு , பொழுது போக்கு 

3.சுதந்திரமாக இருத்தல்

4. உணவு, நித்திரை, கழிவு

                         1                  2                    3                4
ஆண்            6,121          2,141            3,141       11,117
பெண்           5,116         4,138             2,151       11,115

 

ஒரு நாள் நடவடிக்கையில் கூட பெண் ஆணுக்குச் சமமாக இல்லாமல் சுரண்டப்படுகிறாள். வேலை,மற்றும் ஒரு நாள் செயற்பாடு என்ற புள்ளி விபரத்தில் மட்டும் ஒரு பிரஞ்சுப் பெண் சுரண்டப்படுகிறாள் என்பதை மேலுள்ள புள்ளி விபரம் நிறுவுகின்றது.

உலகின் என்ன நடந்தாலும் அதில் தலையிட்டு ஆதிக்கம் புரியும் பிரஞ்சு, தனது சொந்த மக்களை குளிரில் விறைத்து நடுநடுங்கச் செய்கின்றனர்.

இன்று இந்தியா மிக வேகமாக ஏகாதிபத்திய கால்களில் விழுவதில் முண்டியத்துச் செல்கின்றது. சுய தேசியத்தை அழித்து ஏகாதிபத்தின் நவகாலனியாக இந்தியாவை மாற்ற தரகு முதலாளிகள் வேகமாகவே முன்னேறி வருகின்றனர். தை மாதம் வெளியான உலக வங்கி அறிக்கையில் , உலகில் கடன் பெற்று அதில் மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது.

கடந்த வருடம் குபஃகபா என்ற கியூபா நாட்டு இசைக் கலைஞர் முதன் முதலாக நியூயோர்க் நகரில் தனது இசைக் கச்சேரி முடிந்த பின்னர் கியூபாவுக்கும் தனக்கும் இடையேயுள்ள பகைமையான உறவுகளைக் காரணம் காட்டி, அக் கலைஞருக்குச் சேர வேண்டிய சம்பளத் தொகையை கொடுக்க விடாது தடுத்து நிறுத்தியுள்ளது அமெரிக்கா அரசாங்கம். இச் சாதாரண உதவியை தட்டிப் பறித்திருக்கும் அமெரிக்காதான் உலகெங்கிலும் மனித உரிமைகளின் ஏகபோக காவலனாக தம்பட்டம் அடித்து வருகிறது. என்ன வேடிக்கை!

புத்தளம் மாவட்டத்தில் மட்டும் அரச அங்கீகாரம் பெற்ற 1,600 ஏக்கர் இறால் பண்ணைகள் உள்ளன. ஆனால் அதன் உண்மையான பரப்பளவோ 3,000 ஏக்கர்களுக்கு மேலாகும். இவ் இறால் பண்ணைகளின் மூலம் நன்னீர் உவர் நீராக மாறுவதுடன் அன்றாட சீவியத்துக்கு மீன் பிடியில் ஈடுபட்டு வந்த ஆயிரமாயிரம் மீனவர்கள் தொழிலை இழந்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமால் இப் பண்ணைகளின் மூலமாக நுளம்புகள் பெருகி மலேரியா நோய் பரவியும் வருகிறது.

சரிநிகர் 73ல் “உலர்ந்த நம்பிக்கை”  எனத் தலையிட்டு ஓர் ஆசிரியர் தலையங்கத்தை எழுதி, தனது போலி முற்போக்குக்கு ஒரேயாடியாக விடைகொடுத்து விட்டனர்.

இந்த சிறுமியை விபச்சாரி என்று அழைக்க உங்களால் முடியுமா?  முடியுமென்றால் , ஒரே இரவில் நம் குழந்தைகள் கோடிக் கணக்கில் அந்நிய செலாவணியைக் குவிக்க முடியும். சுற்றுலாப் பயணிகளாக வரும் அமெரிக்க, ஜப்பான் , ஜெர்மன் காமவெறியர்களுக்குக் குழந்தைகள் தான்வேண்டுமாம். தாய்லாந்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு எயிட்ஸ் நோயைக் கொடுத்தவர்கள் இப்போது நம் குழந்தைகளைக் கேட்கின்றார்கள்…விற்கப்போகிறோமா?

 

செப்டெபம்பர் 13 ம் திகிதி இரவு 1000 பாசிச விமாசனங்கள் லண்டன் மீது தாக்குதலைத் தொடுத்தது. இங்கு பிரிட்டீஸ் விமானங்களுடன் வானில் கடும் சண்டை நடைபெற்றது. ஜெர்மன் 60 விமானங்களையும் , பிரிட்டன் 26 விமானங்களையும் இதில் இழந்தது. இதையடுத்து லண்டன் மீதான தாக்குதல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மொத்தமாக பிரிட்டன் மீத 46000 க்கு மேற்பட்ட தாக்குதல்களை நடத்திய ஜெர்மன், இதில் 60,000 டன் குண்டுகளை வீசியிருந்ததுடன் 1, 700 விமானங்களையும் இழந்திருந்தது.

சமர்-13 ல் நாம் டி.சிவராம் பற்றிய ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தோம். எமது விமர்சனம் சரியாகவோ இருந்ததை மீண்டும் சரிநிகர் - 69 ல் டி. சிவராமின் கட்டுரை உறுதி செய்துள்ளது.


கடந்த சமர் இதழ்கள் முதல் புலிகள் தொடர்பான எமது நிலை என்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் எல்லைக்குள்ளேயே விமர்சித்து வந்தோம். அதாவது தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டம் சாராத எந்த வகையான புலிகளின் தோல்வியும் மொத்த தமிழ் மக்களின் தோல்வியாகவே அமையும் என்பது சமரின் நிலை. இந்த வகையில் தமிழ் மக்கள் தமது சொந்த போராட்டத்தை கட்டி அமைக்கும் வகையில் புலிகளின் தவறுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றோம். இன்னும் ஒரு நிலையில் புலிகளின் வெற்றி என்பது சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது மட்டுமே. இது மட்டுமே உண்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றியாக இருக்கும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE