Language Selection

பி.இரயாகரன் - சமர்

கடந்த வரலாற்றில் தமிழ்மக்கள் சந்தித்தது, புலிப் பாசிசம் கூறுவது போல் ஒரு அனுபவமல்ல. பேரினவாதம் முதல் இயக்கங்கள் வரை, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கின. புலிகள் மக்களுக்கு கருத்து, எழுத்து, பேச்சு சுதந்திரத்தை வழங்கினால், தாம் அரசியல் அனாதையாகிவிடுவோம் என்று வெளிப்படையாக துண்டுப்பிரசுரம் போட்டு சொல்லுமளவும் புலிப் பாசிசம் கொட்டமடித்தது.

பாதிக்கப்பட்ட மக்களின் பெயரில்தான், பாசிசம் தன்னை தற்காத்துக் கொள்கின்றது, நிலைநிறுத்திக் கொள்கின்றது. அதற்கமைய நடிப்பது, பாசிசத்திற்கு கைவந்த கலை. ஆணாய், பெண்ணாய், எதுவுமறியாத அப்பாவியாய் என்று தொடங்கி அழுவது, ஒப்பாரி வைப்பது என்று அதற்கு தெரியாத பாசிசக் கலை கிடையாது. பொய்யில் புரண்டு, புழுப்பதுதான் பாசிசம்.

தமிழ்ப்பாசிசம் தன்னை மூடிமறைத்து எப்படி எந்த வேஷத்தில் தமிழ்மக்களை ஏமாற்றி பிரச்சாரம் செய்ததோ, அதே உள்ளடக்கதில் இந்திய பொதுவுடமைவாதிகளை ஏமாற்றுகின்றது.  இதற்காக தன்னை மூடிமறைத்துக்கொண்டு; களமிறங்குகின்றது. பாசிசம் எப்போதும் வெளிப்படையாக தன்னை பிரச்சாரம் செய்வது கிடையாது. அது தன்னை மூடிமறைக்கின்றது.

காலச்சுவடு கட்டுரை எழுதியவர் தொடர்பாக, பெட்டையின் பின்னோட்டம் மற்றும்  ஒரு பொதுவான உள்சுற்றில் ஒருவிவாதம் தொடர்கின்றமையால் மேலும் சில விளக்கங்கள் அவசியமாகின்றது.

வன்னி மக்கள் பெயரில் வியாபாரமும்;, அரசியல் விபச்சாரமும், இந்தியாவின் பிழைப்புவாத இலக்கிய உலகு ஊடாகவும் கூட நுழைகின்றது. "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. சந்தர்ப்பவாத ஈழத்து புத்திஜீவிகள் சிலர் தங்கள் பிழைப்புவாத அரசியல் இருப்பு சார்ந்து புனைவு ஒன்றுடன், காலச்சுவட்டின் கைவண்ணத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மறுப்பவர்கள், சமூகத்தின் சமூகக் கூறுகளை பிரித்து அதை மோதவிட்டே கையாள்வார்கள். இங்கு யமுனா புலி அரசியலை தேசிய விடுதலைக்குரிய வழிகாட்டும் தத்துவமாக காட்ட, "கரையார்" தலைமை பற்றி கூறி, வெள்ளாளர் தலைமையை வேர் அறுத்தது பற்றியும் கதை விடுகின்றார். வேறு எப்படித்தான் வரலாற்றை இவரால் திரிக்க முடியும்.

புலி இல்லாது நடந்து முடிந்த தேர்தல் மூலம், தமிழ்மக்கள் ஒரு செய்தியை முகத்தில் அறைந்து கூறியுள்ளனர். எல்லாம் புலியினால் வந்த வினை, புலிகள் அழிந்தால் எல்லாம் சரி என்று கூறி வந்த, எல்லா புலியெதிர்ப்பு பன்னாடைகளுக்கும் மக்கள் தெளிவாக பதிலளித்துள்ளனர்.

தமிழ்மக்களை எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் "ஜனநாயகம்". அப்பாவி மக்களை எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்கின்றனர் என்பதை, வெளியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள்  இலங்கையில் உயிர் வாழவே முடியாது.

இப்படி தனக்கேற்ற ஒரு "மார்க்சிய" கோட்பாட்டை யமுனா உருவாக்கி, அதைக்கொண்டு புலியைச் சாதி பார்க்காத ஒரு இயக்கமாக காட்டிவிட முனைகின்றார். சமூகத்தின் நலனை முதன்மைப்படுத்தி எழுதாது, பணத்துக்கு எழுதுபவர்கள் இவர்கள். சமூகத்தில் இருந்து அன்னியமான தனிமனிதனையோ குழுவையோ, சமூகத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை.  

புலி தனக்குள் சாதியைக் கடைபிடிக்கவில்லை என்றால், அது "முற்போக்கு" இயக்கமாம். பொது விடுதிகளில் அல்லது பொது இடங்களில் சாதி பார்க்காமல் பழகினால், அவர்கள் முற்போக்கானவர்கள். பிரதமராக இருந்த வாஜ்பேயும், ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனும்; ஒன்றாக கூடி இந்துத்துவ சாதிய ஆட்சியை தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஏவிய போது கூட, அவர்கள் தமக்குள் என்றும் சாதி பார்க்கவில்லை.

புலிகள் தமக்குள் சாதி பார்க்கவில்லை, ஆணாதிக்கத்தை கையாள்வதில்லை, முதலாளித்துவ உறவைப் பேணுவதில்லை, பிரதேச வேறுபாட்டை கடைப்பிடிப்பதில்லை, எனவே அதை அவர்கள் மேல் குற்றம்சாட்ட முடியாது. "யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது." இதுதான் யமுனாவின் "மார்க்சிய" ஆய்வு.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE