Sidebar

Language
Tamil Afrikaans Albanian Arabic Armenian Azerbaijani Basque Belarusian Bulgarian Catalan Chinese (Simplified) Chinese (Traditional) Croatian Czech Danish Dutch English Estonian Filipino Finnish French Galician Georgian German Greek Haitian Creole Hebrew Hindi Hungarian Icelandic Indonesian Irish Italian Japanese Korean Latvian Lithuanian Macedonian Malay Maltese Norwegian Persian Polish Portuguese Romanian Russian Serbian Sinhala Slovak Slovenian Spanish Swahili Swedish Thai Turkish Ukrainian Urdu Vietnamese Welsh Yiddish
20
தி, மே

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

னிதர்களாக இருப்பதற்கு மனிதர்கள் ஏன் முயற்சிக்கவேண்டும்?
நீ,உனது சுயத்தில், மனித நடாத்தையில்தானே வாழ்கிறாய்-பின்னெதற்கு மனிதர்களாக இருப்பது?
 
இந்த மனிதர்கள் என்பதன் கற்பிதம் எங்கிருந்து தொடர்கிறது?


 
உன்னை மேல்நிலைப்படுத்தும்போது நான் உனது கற்பிதத்திலிருந்து விலகிவிடுகிறேன்.
 
உன்னிலிருந்து நான் கீழ்மைப்பட்டதாக நீ கற்பிக்கும்போது, எனக்கு மேலான சாதியாகவோ அன்றி இனமாகவோ நீ நிலைத்திருக்க விரும்புகிறாய்.உனது விருப்பம் எதன் பொருட்டும் உனக்கு விருப்பமற்றதை அழிப்பதில் அந்த "மேல்நிலையை"(Übermensch) உருவகப்படுத்துகிறது. உன்னிலிருந்து ஆரம்பமாகும் உலகாக நீ,உனக்கும்-புறவுலகுக்குமான புரிதலைக் கொள்வதில் என்னைத் தொடர்ந்து அழிக்கிறாய்.எனினும்,நீ,கனவுகளுக்குத் தீனி போடும் எமது"வடிவ"மனித விருப்புக்கு உகந்தவனாகும்போது,அப்பப்ப உன்னைப் பிரதி செய்வதில் நான் நிறைவடைகிறேன்.
 
நீட்சேக்கு "நான்" முகவுரை எழுதியபோது,நடுத்தெருவில் நின்றது எனது சந்ததி.அன்றைய பொழுதொன்றில் எலிசபெத் நீட்சே அவசரமாகக் கைத்தடியைக்கொடுத்தாள் கிட்லருக்கு-ஒருத்தி!
 
ஏனென்றாள்,எதற்கென்றாள் தனக்குள்!
 
அவளது விருப்பத்துக்குரிய மேல்நிலை மனிதன் வந்துவிட்டான்-பிறந்துவிட்டான்.அவனது பின்னால் அவனைத் தகவமைத்த ஈ.ஜீ.பார்ப்பன்(I G Farben) இரசயானத்தை உலகுக்கு வழங்கியபோது,அதன் தெரிவில் உலகாளும் மேல்நிலை அவசியத்தைப் பிரதி பண்ண நீட்சேக்கு நன்றிக்கடனாகத் தடியைத் தன் கனவானுக்குக் கொடுத்தாள் அவன் தங்கை(Therese Elisabeth Alexandra Nietzsche).
 
 
 
எல்லோரும் வாருங்கள் வாசல் வரையும் வந்து தரிசிப்போம்
எங்கள் மேலவனை-வெல்வதற்காகவே நாம் சூரியக் குழந்தைகளாகப் படைக்கப்பட்டோம்.
 



 
கடவுளது கட்டளைக்காரர்களுக்கு(Der Rat der Götter;Die Aufsichtsratsmitglieder der I. G. Farben nannten sich im internen kreis "Der Rat der Götter"ஈ.ஜீ.பார்ப்பன் என்ற இரசாயனத் தொழிலகத்தின் மேற்பார்வையாளர்கள்-கட்டுப்பாட்டாளர்கள் தம்மைத் தாமே உள்ளக ரீதிய அழைத்துக்கொண்ட வார்த்தை"கடவுளின் கட்டளையாளர்கள்"என்பது..),கடவுள் செத்துவிட்டான் என்றவன் சாக,அவனது தெரிவின் மேல்நிலை மனிதன் கனவினது வடிவத்தில் ஆரியக் குழந்தைகளாவும் அகலக் கால்வைக்கும் ஆண்டவக் குழந்தைகளாகின.
 
இதன் தெரிவில் செத்தவன்போக,சிறந்தவன் கிட்லர் என்றே இன்றும் ஜெர்மனியர்களில் பலர் அக மகிழக் கூட்டம் வான் நோக்கிக் கை அசைக்க, "மேல்நிலை" அவர்களுக்குள் தெளிவாகவே புரிகிறது.நீ,எங்கு-எது செய்தாலும் நீ வெல்வோனாக இருவென ஆண்சார் புடை நெஞ்சு அகவ,அத்தனைக்கும் ஆரியமே ஆளுந்தகமையுள்ள அதி மானுடத்தின் திசையில் மேல் நிலையுள் மெலிதானவர்களைப் புதைத்தே ஆகவேண்டும்.
 
நீ,நஞ்சை உற்பத்தி செய்திடினும்-அது
கீழ்நிலையானுக்குப் பிணியகற்றும் ஓளடதம்
கொன்றழித்தலென்பது விருப்ப-வடிவத்தின் வினை என்ப
உனக்கே எனது அண்ணனின் திசையைத் தெரிவாக்கிறேன்!
 
கைத்தடிதாம் இது?
இல்லை,உலகை ஆள்வதற்கான செங்கோல்
செஞ்சேனை கட்டிக்காத்த இருஷ்சிய மண்ணில்
சோகமாய் கிட்டலர் காலில் தொங்கிய மானுடம் கீழ்நிலை
 
கொடிய வதைகள் எல்லாம்
விருப்ப மானுடத் தெரிவில் உலகைக் கடைந்தேற்றும்
கோபுரமுள்ள கோவில்கள் என்று கொடியை ஏற்று-அது
ஆரிய சாம்பிராஜ்யத்தை அழகு என்று சொல்லும் அதிமானுடன் வணங்க!
 
 
தத்துவத்துக்கும்,நடைமுறைக்குமான புள்ளியில் அறுபது மில்லியன் மக்களுக்குச் சமாதிகட்டக்கூடிய வலுவுக்கு உரம் போட்டது இந்த "மேல்நிலை"மனித நிலை-விருப்பு.இந்த உரத்தோடு வளர்தெடுத்துச் செல்வத்தின் இருப்பைக் கொள்ளையிட முனைந்தவர்கள் மேல்நிலையை விரும்பியவர்கள்.அப்போது,விருப்பமென்பது ஒரு நிலை.அது,ஒரு குழுவுக்குரிய விருப்பாகவே என்றும் இருப்பதால் அந்தக் குழுவிலிருந்து அந்நியப்படும் பெரும்பகுதி மக்கள் கீழ்நிலையை அடைகிறார்கள்.
 
அதீத புனைவுக்கு எது அவசியமான தெரிவாக இருக்கிறது?
 
அச்சமுடையவர்கள்,அதிகாரத்துவமுடையதொரு சமூதாயத்தைக் குறித்துக் கனவு காண்கின்றனர்!
 
அந்த அதிகாரம் நம்மிடம் புலிவடிவிலும்,பிரபாகரன் வடிவிலும் நிலைத்திருந்தது.அதன் முடிவு,கிட்லரது முடிவோடு நெருங்கும்போது எஞ்சியது ஏமாற்றம் மட்டுமல்ல.அது,நோக்கிய விருப்பின் தெரிவில் கற்பனைக்குள் "அழ்மன விருப்பு" அதி மானுட நடாத்தையும் தான்.இந்த விருப்பு இன்றுவரையும் ஜேர்மனியர்களை எங்கும்-எதிலும் முதன்மை பெறவேண்டுமென்ற துடிப்புக்கும்,மற்றவர்களை ஏற்காது-பரிகாசிக்கும் பண்புக்கும் விரட்டிக்கொண்டி இருக்கு.
 
 
கட்டுக்குள் இருக்கும் அதிகாரம்,கண்டுகொள்ளவதற்கு நீட்சே சொன்ன வடிவ-விருப்பு"மேல்நிலை"மனித நடாத்தை புரியத்தக்கபோது புரியாத புதிராக நம்மை ஆட்டும்.மதத்தினதும்,பெண்ணினதும் இயல்புகளைச் சதா வருத்தத்துக்குரிய பகுதிகளாகக் கண்ட நீட்சேக்கு சரதுஷ்டரா துணைக்கு வருகிறான்.சொல்லாத பக்கங்களென்ற ஒன்றிக்கு அவன் கொடுத்த "ஊபமென்ஸ்"தன்முனைப்பின்பாற்பட்டதென்று சொல்வதிலும் சிக்கலொன்று உண்டாக்குவதற்கு அவனுக்குக் கைகொடுத்தது"அதிகாரத்தின் ஆண்மை"இது திரும்பத்திரும்ப வரும்.அழியும் அழிந்து மீளத் தன்னைத் தகவமைக்கும்.இந்த நிகழ்வூட்டத்தோடு திசை நோக்குகிறது இன்றைய புதிய நாசிகளது திசைவழி.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
 
15.11.2009